உடுவில் மகளிர் கல்லூரி பெற்றோர் சங்கத்தினருக்கும், நிர்வாகத்தினருக்குமிடையில் சந்திப்பு (காணொளி)

468 0

யாழ்ப்பாணம்  உடுவில் மகளிர் கல்லூரி விடயம் தொடர்பில், பெற்றோர் சங்கத்தினர் தென்னிந்திய  திருச்சபையின் ஆயரை  இன்று மதியம் சந்தித்துள்ளனர்.

நேற்றையதினம் சுன்னாகத்தில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றுகூடி பெற்றோர் சங்கம் அமைத்து, மூன்று தீர்மானங்களை நிறைவேற்றி அத்தீர்மானத்தின் படி தென்னிந்திய திருச்சபையின் ஆயரை இன்று மதியம் சந்தித்துள்ளனர்.

இச் சந்திப்பின்போது உடுவில் மகளிர் கல்லூரியின் ஓய்வு பெற்ற அதிபரை இரண்டு வருட காலங்களுக்;கு கடமையாற்ற அனுமதியளிக்க வேண்டும் என்றும், பழைய அதிபருக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும் பல்வேறு கோரிக்கைகளை பெற்றோர்கள் தென்னிந்தியத் திருச்சபை ஆயரிடம் முன்வைத்தனர்.

இதன்போது, புதிய அதிபர் நியமிக்கப்பட்டது மாற்றப்படக்கூடியது அல்ல என்றும், அந் நியமனமானது நிர்வாக படிமுறையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்த தென்னிந்திய திருச்சபையின் பேராயர், புதிய அதிபருக்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்கி கல்லூரியின் சிறப்பு மேலோஙக ஒருமித்து பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன் புதிய அதிபரின் தலைமையில் கல்லூரி இயங்குகின்ற நிலையில், எந்தவொரு மாணவியும் பழிவாங்கவோ, இம்சிக்கவோ, அல்லது பாதிப்பிற்கு உள்ளாகவோ இடமளிக்கப்படமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தையும் பெற்றோருக்கு வழங்கியுள்ளார்.

மேலும் புதிய அதிபருக்கு ஒத்துழைப்பு வழங்கி கல்லூரியின் சிறப்பு மேலோங்க ஒருமித்து பாடுபட வேண்டும் என்றும் தென்னிந்திய திருச்சபையின் பேராயரும், உடுவில் மகளிர் கல்லூரியின் தலைவருமாகிய கலாநிதி டானியல் தியாகராஜா கேட்டுக் கொண்டார்.