மன்னாரில் மின்னல் தாக்கி மூன்று வீடுகளுக்கு சேதம்

317 0

மன்னாரில், நேற்று பெய்த அடைமழையின் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால், 3 வீடுகளின் உடைமைகள் சேதமடைந்துள்ளன.

மூர் வீதி, சாவக்கட்டு பகுதியிலுள்ள மூன்று வீடுகள் மீது நேற்று அதிகாலை 4.45 மணியளவில், மின்னல் தாக்கியுள்ளது.

இதன்போது, குறித்த வீடுகளிலிருந்த பெறுமதிமிக்க மின்சாதனப் பொருட்கள் சேதமடைந்துள்ளதுடன், வீட்டு மின் இணைப்புகளும் வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளன.

அத்துடன், அவ்வீட்டு வளவுகளிலிருந்த தென்னை மரங்களும், மன்னல் தாக்கத்துக்கு இலக்காகிச் சேதமடைந்துள்ளன. எனினும், அவ்வீடுகளிலிருந்த எவருக்கும், எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென, பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், மின்னல் தாக்கத்தின் போது ஏற்பட்ட இடி சத்தத்தால், குறித்த வீடுகளிலிருந்த சிறுவர்கள், அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, மன்னார் பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள், பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன், சேத விவரங்களையும் பெற்றுச்சென்றுள்ளனர்.

Leave a comment