கருத்துக்கேட்பு கூட்டத்தில் இருபிரிவினரிடையே மோதல் – கண்ணீர் புகை குண்டு வீச்சு

314 0

புதுச்சேரி காலாபட்டு தனியார் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டத்தில் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

புதுச்சேரி காலபட்டு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக இன்று கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இரு தரப்பினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. வாக்குவாதங்கள் முற்றிய நிலையில் அடிதடி, கைக்கலப்பு வரை சென்றது.
திடீரென கூட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால், அப்பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசார் தடியடி நடத்தி மோதலில் ஈடுபட்டவர்களை கலைக்க முயற்சி எடுத்து வருகின்றனர்.

Leave a comment