மூன்றாவது முறையாகவும் தீக்கிரையாக்கப்பட்ட வனப்பகுதி

291 0

கேப்பாபுலவில் உள்ள தேக்கங்காட்டு வனப்பகுதியில் நேற்று (05) மாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது தடவையாகவும் நேற்று இவ்வாறு தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காட்டுக்கு அருகில் மூட்டிய நெருப்பு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக தேக்குமரஞ்சோலைகளில் கீழ் உள்ள காய்ந்த இலைகள் மற்றும் பற்றைகள் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இராணுவ முகாமுக்கு அருகில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில் படையினர் தீயினை கட்டுப்பட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். தீயினால் 25 ஏக்கர் வரையான தேக்கங்காடுகள் எரிந்துள்ளன.

இந்தநிலையில், நிலவும் கடும் வெப்பமான காலநிலையில் மக்கள் குப்பைகளுக்கு நெருப்பு மூட்டும் போது அவதானமாக செயற்படுமாறு இராணுவத்தினர் கோரியுள்ளனர்.

இதேவேளை இந்த தீப்பரவலினால் கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Leave a comment