உலகின் மிகப்பெரிய கண்ணாடி மாளிகை – ரூ.380 கோடி செலவில் புதுப்பொலிவுடன் மீண்டும் திறப்பு

282 0

லண்டனில் உள்ள உலகின் மிகப்பெரிய விக்டோரியா கண்ணாடி மாளிகை 5 ஆண்டுகளுக்கு பின் ரூ.380 கோடி செலவில் புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள கியூ பகுதியில் உலகின் மிகப்பெரிய விக்டோரியா கண்ணாடி மாளிகை (தாவிரவியல் பூங்கா) உள்ளது. 1863 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த கண்ணாடி மாளிகை மிகவும் புகழ்பெற்றது. இதில் பல்வேறு வகையான தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வித்தியாசமான தாவரங்கள் இங்கு பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. 2003-ம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இதனை அங்கீகரித்தது.

பல ஆண்டுகளாக பயன்பாட்டிலிருந்த கண்ணாடி மாளிகை சற்று சேதமடைந்திருந்து. அரிமானம், நீர் பாதிப்பு மற்றும் பல கோளாறுகளை சரி செய்வதற்காக 5 ஆண்டுகள் மூடப்பட்டிருந்தது. 380 கோடி ரூபாய் செலவில் பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பல புதிய தாவரங்களின் தொகுப்புகளுடன் கண்ணாடி மாளிகை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

Leave a comment