புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள்-2

15393 0

பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு. அன்ரன் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும் ஏற்பட்டது. ஆனால் இந்தியா பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை தலைவர் பிரபாகரன் பின்வருமாறு கூறியிருக்கிறார்.

“எமக்கு இந்தியாவின் உதவியும் நல்லெண்ணமும் அவசியம். அதே வேளையில் இந்தியா தனது தீர்வைத் தமிழீழ மக்கள் மீது திணிப்பதை நாம் விருப்பவில்லை. தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் முழு உரிமையும் எமது மக்களுக்கு உண்டு”என்று. ஆனால் இந்திய அரசும் அதன் பிரதமரும் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலையில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அப்போதைய தமிழக முதல்வருக்கு அழுத்தங்களைக் கொடுத்து, 1986ம் ஆண்டு ஐப்பசியில் தமிழக காவற்துறை மூலம் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் வைத்திருந்த தகவல் தொடர்புச் சாதனங்களைப் பறித்தார்கள். தலைவர் பிரபாகரனையும் மற்றைய போராளிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று குற்றவாளிகளை நடத்துவது போன்று நடத்தினார்கள்.

சாகும்வரையிலான உண்ணாவிரதம் இந்நிலையில் தலைவர் பிரபாகரன் என்ன செய்யப்போகிறார் என்பது ஒரு பெரும் கேள்விக்குறியாக இருந்தது.ஆயுதப் போராட்ட இயக்கத்தின் தளபதி, சிங்களப்படைகளின் சிம்ம சொப்பனமான தலைவர் பிரபாகரன், அனைவரும் எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழகக் காவற்துறையினர் தங்களிடம் இருந்து பறித்த தகவல் தொடர்புச் சாதனங்களைத் திரும்பித்தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நீர், ஆகாரம் இன்றி சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை 1986ம் ஆண்டு கார்த்திகை 22ம் நாள் தொடங்கினார். அவரின் இந்தச் செயல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. தலைவர் பிரபாகரனின் மன உறுதியைப் புரிந்துகொண்ட இந்திய அரசு கோரிக்கையை ஏற்றுத் தகவல் தொடர்பு சாதனங்களைத் திருப்பிக் கொடுத்தது. உண்ணாவிரதம் கைவிடப் பட்டது.

இவ் உண்ணாவிரதம் குறித்து அப்போது சில பத்திரிகையாளர்கள் தலைவர் பிரபாகரனிடம் வினாத்தொடுத்தார்கள். பத்திரிகையாளர்- உங்களுடைய அகிம்சைப் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்திருக்கும் போது இலங்கையிலும் அகிம்சை முறையிலே போராடலாமே, ஆயுதம் ஏந்திப் போராட வேண்டய அவசியம் ஏன்? என்று கேட்டார்கள். தலைவர் பிரபாகரன்- உலகிலேயே தன்னுடைய சுதந்திரத்தைப் பெறுவதற்கு அகிம்சை முறையில் போராடி வெற்றி பெற்ற நாடு இந்தியா. எனவே அகிம்சைப் போராட்டத்தின் மகத்துவத்தைப் புரிந்திருக்கிற இந்தியாவில் எனது அகிம்சைப் போராட்டத்திற்கு வெற்றிகிடைத்திருக்கிறது. ஆனால் மனித நேயமற்ற இனவெறிச் சிங்கள அரசிடம் அகிம்சை முறை எடுபடாது. எனவேதான் தமிழீழத்தில் நாங்கள் ஆயுதம் ஏந்திப் போராடுகிறோம்” என்றார். பெங்களுர் மாநாடு இதற்குப் பின் பெங்களுரில் நடந்த சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கள அரசின் சனாதிபதி ஜே.ஆர் ஜேயவர்த்தனா வந்தபோது அவருடன் பேச்சுவார்த்தையில் கிழக்கு மாகாணத்தைத் தமிழர், சிங்களவர், முஸ்லிம் என்ற ரீதியில் மூன்று பகுதிகளாகவும் பிரிக்கலாம்

~~ என்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சொன்னதாக தலைவர் பிரபாகரனிடம் இந்திய அரச தரப்பினரால் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தலைவர் பிரபாகரனோ “வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டாக இருப்பதனை ஒன்றாக இணைக்கவேண்டும் என்பதனை நாங்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் போது, இரண்டை நாலாக கூறுபோடும் யோசனையை நாங்கள் எப்படி ஏற்கமுடியும்?” என்று கூறி நிராகரித்து விட்டார்.

அத்துடன் இந்த பெங்களுர் பேச்சுவார்த்தையில் தான், தலைவர் பிரபாகரனுக்கு முதல் அமைச்சர் பதவி தருவதாக ஜே.ஆர். nஐயவர்த்தனா இந்திய அரசுக்கூடாக தெரிவித்தார். இதற்கு தலைவர் பிரபாகரன் “இது ஒரு மாயவலை, தமிழ் இனத்தை அழிப்பதற்கு வேறு வகையாகப் பின்னப்பட்ட சதிவலை. அதிகாரங்கள் எதுவுமற்ற, நினைத்தால் சனாதிபதியால் கலைக்கக் கூடிய மக்களுக்கு எந்தவித நன்மையும் செய்யமுடியாத பொம்மைப் பதவிதான் முதல் மந்திரிப் பதவி” என்று கூறி அதனைத் தூக்கி எறிந்துவி;ட்டார்.

தமிழீழம் திரும்புதல் தமிழ் நாட்டில் இருக்கும் வரை தனக்கு மத்திய மாநில அரசுகளின் நிர்ப்பந்தம் இருந்து கொண்டேயிருக்கும். இந்திய அரசுடன் பேசவரும்போது டில்லியிலோ அல்லது சென்னையிலோ தன்னைக் கொலை செய்து தமிழீழப் போரை அழிக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் தமிழ் நாட்டில் இருக்கும்வரை ஆபத்து நீடிக்கவே செய்யும். எனவே தமிழீழம் திரும்பிச் செல்வதன் மூலம் விடுதலைப் போர் மேலும் வலுவடையும் என்ற உறுதியான முடிவில் தலைவர் பிரபாகரன் 1987ம் ஆண்டு தை 3ம் நாள் தமிழீழம் திரும்பினார்.

தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பியதனை அறிந்த சிறீலங்கா அரசும் அதன் படைகளும் கலக்கம் அடைந்த வேளையில், இந்திய அரசும் அதன் உளவுப்படையும் குழப்பம் அடைந்தன. இனி எவ்விதம் இலங்கைத் தீவின் இனப்பிரச்சினையில் தலையிடுவது என்று குழம்பிய நிலையில் சிறீலங்காப் படைகளின் சில மூர்க்கமான இராணுவ நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக ஒத்துழைத்து அதன்மூலம் தமிழீழ மக்களுக்கு ஏற்படும் பாரிய அழிவுகளில் இருந்து அவர்களை மீட்கும் “இரட்சகர்” என்ற போர்வையில் தமிழீழத்தில் தன் இராணுவத் தலையீட்டை மேற்கொள்ளலாம் எனத்திட்ட மிட்டு இந்திய அரசு செயற்பட்டது.

1987 வைகாசி 1ம் நாள் உலகத் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழமக்களுக்கு ஆற்றிய உரையில், “நாம் போராடி, இரத்தம் சிந்தி, எமது விடுதலையை வென்றெடுக்க வேண்டும். எமக்கு வேறு வழியே இல்லை. ஒன்று அடிமைகளாக அழிந்தொழிய வேண்டும் அல்லது போராடிச் சுதந்திரமாக வாழ வேண்டும். இதுதான் எமது அரசியல் தலைவிதி. இன்று இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் ஒரு உறுதி செய்து கொள்வோம். அதாவது சுதந்திர தமிழீழ தனி அரசுதான் எமது பிரச்சினைக்கு ஒரே தீர்வு. இறுதியான தீர்வு. இந்தத் தனி அரசை அமைக்க நாம் எமது உயிர், உடல், ஆன்மாவை அர்ப்பணித்துப் போராடுவோம்.

இது எமது தொழிலாளர் தினப் பிரகடனமாக அமையட்டும்” என்றார். தமிழீழத்தில் இந்தியாவின் நேரடி இராணுவத் தலையீடு 1987ம் ஆண்டு ஆடி 24ம் நாள் இந்திய அதிகாரிகள் சிலர் தலைவர் பிரபாகரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்து ‘இந்தியாவின் பிரதமர் ராஐPவ் காந்தி உங்களைச் சந்தித்து முக்கியமான விடயமாகப் பேசவிரும்புவதாக’ கூறித் தலைவர் பிரபாகரனை டில்லிக்கு அழைத்து செல்ல முயன்றார்கள், அவசரப்படுத்தினார்கள். இந்நிலையில் தமிழீழ மக்களுக்கு தலைவர் பிரபாகரன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் ‘இன்று தமிழ் மக்கள் தங்கள் இலட்சியத்தை வென்று எடுக்கும் ஒரு தலைமையைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை அறுதி யிட்டுக் கூறுகின்றேன்.

நீங்கள் எனக்கு அளித்துவரும் பொறுப்புக்களை நான் நேர்மை- யாகவும் உண்மையாகவும் உறுதியுடனும் செய்வேன் என நம்புகின்றேன். தற்காலத்தில் காணப்படும் இடைக்கால தீர்வுகள் எமது பிரச்சினையின் தீர்வாக அமையாது. எனவே தமிழ் மக்களின் நிரந்தரமான, நிம்மதியான, சுபீட்சமான எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் நிரந்தர தீர்வுக்காகவே நான் பாடுபடுகின்றேன். இத் தீர்வு தமிழீழம் என்றே நான் நம்புகிறேன்.

இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தியின் விசேட அழைப்பின் பேரிலேயே நான் தமிழீழத்தைவிட்டு உத்தியோக பூர்வமாக இந்தியா செல்கின்றேன்’ என்று கூறிவிட்டு இந்திய அரசு அனுப்பி இருந்த இராணுவ கெலிகொப்டரில் டில்லிக்கு புறப்பட்டார். போகும் வழியில் தமிழகத்தின் முதலமைச்சர் எம்.ஐp. ஆரை சந்தித்துப் பேசினார். அப்போதும் எதற்காக இந்த அவசர அழைப்பு என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. டில்லி சென்ற தலைவர் பிரபாகரனையும் அவரது ஆலோசகர்களையும் ‘அசோகா ஹொட்டலில்’ தங்க வைத்தனர்.

இந்தியாவின் சிறீலங்காவுக்கான தூதுவர் தீட்சித், இந்திய வெளிநாட்டுத்துறைச் செயலாளர் மேனன் உட்படப் பல அதிகாரிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து இந்தியாவும் சிறீலங்காவும் செய்து கொள்ளவிருக்கும் ~ஒப்பந்தம்~ பற்றி முதன்முதலாகத் தெரிவித்தார்கள். இதைக் கேட்டதும் தலைவர் பிரபாகரன் அதிர்ச்சி அடைந்தார். ஒப்பந்தத்தின் பிரதிகளை அவரிடம் கொடுத்துவிட்டு உடனே திரும்பப் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த ஒப்பந்தத்தினை ஏற்கமுடியாது என்று தலைவர் பிரபாகரன் மறுத்தார். தலைவர் பிரபாகரனை சம்மதிக்க வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தலைவர் பிரபாகரன் உறுதியாக ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார். இந்தியப் பிரதமர் சந்திக்க விரும்புவதாக கூறி அழைத்துச் சென்றவர்கள், பிரதமரும் தலைவர் பிரபாகரனும் சந்திக்க ஏற்பாடு செய்யவில்லை. இடையில் நான்கு நாட்கள் பறந்தோடின. தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்துவிட்டார் என்பது திட்டவட்டமாகத் தெரிந்ததும் தமிழகத்தில் இருந்த இந்தியாவின் அடிவருடிகளான மற்றைய தமிழ் குழுக்களின் பிரதிநிதிகள் டில்லிக்கு அழைத்து வரப்பட்டனர். சொல்லி வைத்தபடியே ஒப்பந்தத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அறிவித்தார்.

யார் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆடி 29ம் நாள் கொழும்பு செல்லப் போவதாகவும் அறிக்கை விட்டார். இதற்குப் பின்னர் தலைவர் பிரபாகரனை இந்தியப் பிரதமர் சந்தித்தார். அப்போது தலைவர் பிரபாகரன் ஒப்பந்தத்திலுள்ள பலகுறைகளைச் சுட்டிக் காட்டினார். ஆனால் தலைவர் பிரபாகரன் இந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகப் பொய்யான செய்திகள் இந்திய அதிகாரிகளால் தொடர்பு சாதனங்களுக்குக் கொடுக்கப்பட்டது. உடனே தலைவர் பிரபாகரன் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார்.

தலைவர் பிரபாகரன் தங்கியிருந்த அசோகா ஹொட்டலைச் சுற்றி ‘கறுப்புப் பூனைகள்’ என்ற இந்திய கொமாண்டோப் படைப்பிரிவினர் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் 1987ம் ஆண்டு ஆடி மாதம் 29ம் நாள் தமிழீழ மக்களின் ஒப்புதல் இன்றி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒப்புதல் இன்றி, தமிழீழ மக்களின் விடுதலையே தன் உயிர்மூச்சு என்று சொல்லி தமிழீழ விடுதலைப் போரை வழிநடத்திச் செல்லும் தலைவர் பிரபாகரனின் ஒப்புதல் இன்றி அவரை டில்லியில் ஹொட்டலில் பூட்டி வைத்துவிட்டு, பிராந்திய வல்லரசு என்ற இறுமாப்புடன் இந்தியப் பிரதமர் ராஐPவ் காந்தி சிறீலங்காப் பிரதமர்ஜே.ஆர். nஐயவர்த்தனாவுடன் இந்தியாவின் பூகோள நலனுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இந்திய இராணுவம் தமிழீழப் பகுதிகளுக்கு ‘அiதிப்படை’ என்ற பெயரில் அனுப்பப்பட்டது.

ஒப்பந்தம் செய்துவிட்டு இந்தியா திரும்பிய இந்தியப்பிரதமர் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துச் சில உறுதிமொழிகளை அளித்தார். இந்த உறுதி மொழிகளைப் பெற்றுக் கொண்ட தலைவர் பிரபாகரன் தமிழீழம் திரும்பினார். இந்திய – தமிழீழப் போர் 1987ஐப்பசி 10ம் நாள் இந்திய – தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் எம். ஜே. இராமச்சந்திரனுக்கு 1987 ஐப்பசி 11ம் நாள் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இன மோதல்கள் வெடித்தன.

இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது. இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி திரு. பந்த், இந்திய தூதுவர் திரு. தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் nஐனரல் சுந்தர்ஐp ஆகியோர் ஒருபுறமும், சிறீலங்கா சனாதிபதி nஐயவர்த்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும், எமது போராளிகளுக்கு பொது மன்னிப்பு இல்லையென்றும் nஐயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராககடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது. 1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகைக் (ஈழமுரசு, முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர்.

பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர். அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர். அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம். போர் மூண்டது. இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை, விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம். நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காக போராடி வருகிறோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிட போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்.’ யுத்தம் தீவிரமாக நடைபெற்றது. யாழ் குடாநாட்டை கைப்பற்ற இந்தியப்படை ஒரு மாதகாலம் போரிட்டது. இப்போரைத் தலைவர் பிரபாகரன் தலைமையேற்று விடுதலைப் புலிகளை வழிநடத்தினார். தொடர்ச்சியான கெரில்லாப் போர்முறைதான் இனிமேல் இந்தியப் படையை எதிர்கொள்ளத் தகுந்த போர்முறை எனத் தீர்மானித்து, தலைவர் பிரபாகரன் தனது போராளிகளுடன் தமிழீழக் காடுகளுக்குச் சென்றார். கெரில்லா போர் தொடர்ந்தது. இந்தியப் படையினர் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளை எதிர் கொள்ளத் திராணியற்ற இந்தியப் படை பொதுமக்கள் மீது தனது வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பொது மக்கள் பலரைக் கொன்று குவித்தது. பெண்கள் பலரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தது. இந்தப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தலைவர் பிரபாகரன் 12.10.1987 இலும் 14.10.1987 இலும் 13.01.1988 இலும் இந்தியப்பிரதமர் இராஐPவ்காந்திக்குப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமக்கு அளித்த உறுதி மொழிகளின்படி இடைக்கால அரசைத் தமிழ்ப்பகுதிகளில் நிறுவினால் தாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துக் கடிதம் அனுப்பினார். ஆனால் ராஜீவ் காந்தி தலைவர் பிரபாகரனைக் கொன்று, தமிழீழ விடுதலை அரசியல் இலட்சியத்தை அறவே ஒழித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் தன்னுடைய ஆயுதப் படைகளை இலட்சக்கணக்கில் தமிழீழத்தில் இறக்கிவிட்டார். போர் தொடர்ந்தது.

தமிழீழத் தேசியத் தலைவர் ‘தமிழீழ விடுதலை’ என்று சொல்லிக் கொண்டு ஆயுதம் தூக்கிப் போராடப் புறப்பட்ட தமிழ்க்குழுக்கள் எல்லாம் தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்து. ‘தமிழீழவிடுதலை’ என்ற இலட்சியத்தைக் கைவிட்டு இந்திய, சிறீலங்கா அரசுகளின் கைக்கூலிகளாக மாறிச் செயற்படத் தொடங்கினர். ஆனால் தலைவர் பிரபாகரனோ சாதி, சமய, பிரதேச வேறுபாடு இன்றி, தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்தார். உலகம் பார்த்து வியந்து நிற்க சின்னஞ் சிறிய தமிழீழ தேசம் வீராவேசத்துடன் போரிட்டது. இலங்கைத் தீவில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெறும் போரை தலைமை தாங்கி நடத்தும் ஒப்பாரும் மிக்காரும் அற்ற முதல் தலைவன் பிரபாகரன் தான் என்று சிறீலங்கா நாட்டு சிங்கள மக்களும் புகழந்தனர்.

இப்போர் உக்கிரமாக நடைபெற்ற காலப் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் என்ற நிலை ‘தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்’ என தமிழ் மக்கள் தமிழீழத்திலும் உலகெங்கிலும் அழைக்கத் தொடங்கினர். அன்னை பூபதி தியாகச் சாவு இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தாய்க்குலம் எழுச்சி கொண்டு போராடப் புறப்பட்ட போது தென் தமிழீழத்தில் உள்ள மட்டக்களப்பில் அன்னை பூபதி தன் வயிற்றினில் போர் தொடுத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்து என்று இந்திய அரசுக்குக் கூறி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். ஆனால் காந்தியம் பற்றி புகழ்ந்துரைக்கும் இந்திய தேசத்துப் பிரதமர் அன்னை பூபதியின் உண்ணாவிரதத்தை எள்ளிநகையாடினார்.

அன்னை பூபதி 19.04.1988 இல் ‘தியாகச் சாவு’ அடைந்தார். அன்னை பூபதியின் தியாகச் சாவு பற்றி அறிக்கை ஒன்றை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்தார். ‘எமது புனித விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுக் காவியமாகிவிட்ட எமது தியாகிகளில் அன்னை பூபதி ஓர் உன்னத இடத்தைப் பெறுகிறார்.

ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் தலைவியாக வாழ்ந்து வந்த சாதாரண வாழ்க்கையைத் துறந்து, சாதாரண பற்று உறவுகளைத் துறந்து, தனது இனத்தின் விடுதலைக்காக அவர் தனது உயிரை அர்ப்பணித்தார். இந்திய இராணுவ அடக்குமுறைக்கு எதிராக அவர் தொடுத்த அறப்போர் காந்திய தேசத்தை தலைகுனிய வைத்தது. தனி மனிதப் பிறவியாக அவர் சாகவில்லை. தமிழீழத்தாய்க் குலத்தின் எழுச்சி வடிவமாக அவரது தியாகம் உன்னத வடிவம் அடைகிறது’ என்றார்.

சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை 1988இல் புதிய சனாதிபதியாக பதவியேற்ற பிரேமதாச 1989இல் இருந்தே விடுதலைப்புலிகளை சமாதானப் பேச்சுக்கு வருமாறு மாறி மாறி அழைப்புக்களை விடுத்தார். தமிழீழ மண்ணில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும் என தமிழீழ விடுதலைப் புலிகளும் விரும்பியதால் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் பிரேமதாசாவின் அழைப்பை ஏற்க முடிவு செய்தார். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் விவேகமான இராசதந்திர காய்நகர்த்தலால் இந்திய – சிறீலங்கா உறவுகளில் பகைமை மூண்டது. இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு பிரேமதாசா பகிரங்கமாக அறிவித்தார். சிறீலங்காவின் அழைப்பின் பேரில் அமைதிகாக்கப் போரிடுவதாகக் கூறி வந்த இந்திய அரசுக்கு நிலைமை சங்கடமாகியது.

அவமானப்பட்டு போரில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் படுதோல்வியடைந்து முகத்தில் கரிப+சியபடி இந்திய இராணுவம் பங்குனி 1990இல் தமிழீழத்தில் இருந்து வெளியேறிச் சென்றது. இந்திய பிராந்திய வல்லரசு விடுத்த மிகப் பெரும் இராணுவ சவாலை தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் உறுதியான இராணுவ நடவடிக்கைகளாலும், ஈடுகொடுக்க முடியாமல் இந்திய அரசாலும் அதன் இராணுத்தாலும் உருவாக்கப் பட்ட ‘தமிழ் தேசிய இராணுவம்’ என்ற கூலிப்படை சிதறுண்டு ஓடியது.

பெரும்பான்மையோர் ஆயதங்களுடன் சரணடைந்தனர். மாகாணசபை கவிழ்ந்தது. இந்திய அரசின் இறுதித்திட்டமும் தவிடுபொடியாகியது. தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தனது மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தார். சிறீலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. இறுதியில் சிங்கள இனவாதத்தின் ஏமாற்று வேலைகளால், விவேகமான அரசியல் நகர்வுகளினாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் வெற்றி கொண்டது. இந்திய இராணுவம் வெளியேறிய பிரதேசங்கள் துரித கதியில் விடுதலைப் புலிகள் வசம் வீழ்ந்தன. இல்டசிய உறுதியும் போர் அனுபவமும் வீரமும் மிகுந்த விடுதலைப்புலிப் படைவீரர்களின் மின்னல் வேகத் தாக்குதல்களுக்கு பேச்சுவார்த்தை உருப்படியான தீர்வுகள் பற்றி ஆராயப்படாது முறிந்து போனது. தமிழீழப் போர் 2 சிங்களக் காவல்துறையினரின், ஈடுபட்ட விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழு அரசுக்கு சுட்டிக்காட்டி வந்தனர்.

ஆனால் சிறீலங்கா அரசோ அதுபற்றிய அக்கறையின்றி இருந்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தைகளில் முறுகல் நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்த போது ஆனி 10, இராணுவத்தினரின் அத்துமீறில்கள் பற்றிப் பலமுறை சிறீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகளில் 1990 இல் தென்தமிழீழத்தில் உள்ள கல்முனை என்ற இடத்தில் இஸ்லாமியத் தமிழர் ஒருவருக்கு எதிராக சிங்களக் காவற்துறையினர் மேற்கொண்ட மனிதவுரிமை மீறல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் சிங்களக் காவல்துறையினருக்கும் இடையில் எழுந்த சச்சரவு இறுதியில் யுத்தமாக மூண்டது. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உடனடியாகவே இவ்யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் சிறீலங்காவின் சிங்கள இனவாத அரசும் அதன் படைகளும் தமிழின அழிப்பும் தமிழ்மண் பறிப்புமே தமது இறுதி முடிவு என்ற ரீதியில் செயற்பட்ட போது தமிழீழ மக்களையும் தமிழீழ மண்ணையும் பாதுகாப்பதற்குச் சிறீலங்கா அரசு ஏவிவிட்ட யுத்தத்தை எதிர்கொள்வதைத் தவிர வேறுவழி இருக்கவில்லை.

1991 புரட்டாதி 1ம் நாள் தமிழீழப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து அப்போதைய அரசியல், இராணுவ நிலைமைகள் பற்றி விளக்கும்போது ‘தமிழீழப் போர் 2 தொடங்கும் போது இருந்த பல சிங்கள இராணுவ முகாம்கள் தற்போது இல்லை. கொக்காவில், மாங்குளம் போன்ற இடங்களில் இருந்த இராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதால் வன்னி;ப் பிரதேசத்தின் பெரும்பகுதி எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. யாழ் கோட்டை முகாம் அழிக்கப்பட்டதால் யாழ்ப்பாணத்தின் நகரப்பகுதியும் விடுவிக்கப்பட்டது. ஆனையிறவுப் போரில் மரபு ரீதியான இராணுவ அணியாக எதிரிகளுடன் நேரடியாக மோதி அழிக்கும் நிலையின் முதற்படியை எடுத்து வைத்தூம். பெரிய எண்ணிக்கையிலான இராணுவத்தை நீண்ட நாட்களாக தடுத்து வைத்துப் போரிட்டோம். ஆனையிறவுப் போரில் ஏற்பட்ட இழப்புக்களுக்கு அஞ்சினால் யுத்தம் நடத்த முடியாது. இழப்புக்களை வளர்ச்சியின் ஊன்று கோலாகக் கருதவேண்டும்.

10-07-91 இல் ஆனையிறவுப் போர் ஆரம்பித்து 23-08-91 வரையிலான 43 நாள் போரில் 564 போராளிகளை இழந்திருக்கிறோம். எதிர்பார்த்ததைவிட பெரியளவில் படையினர் இறக்கப்பட்டு நீண்ட நாட்கள் இடம் பெற்ற யுத்தத்தைப் பார்த்தால் எமது தரப்பிலான இழப்பு பெரிதெனச் சொல்ல முடியாது. துன்பங்களை அனுபவிக்கும் மக்களிடம் அடுத்து என்ன என்ற ஏக்கம் இருக்கத்தான் செய்யும். எனினும் பெரிய அளவில் அவர்கள் அணிதிரள வேண்டும். போராட்டத்தில் ஏற்படும் இழப்புக்களை உடனுக்குடன் ஈடுசெய்ய வேண்டும். மக்கள் முழுமையாக எம்மோடிணைந்து எமது கஷ்டதுன்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நிபந்தனையற்ற வகையில் சிறீலங்கா அரசுடன் பேசுவதற்கு எப்போதும் தயாரக இருக்கிறோம். ஆனால் பேச்சுவாhத்தைக்குரிய சூழ்நிலையை சிறீலங்கா அரசுதான் உருவாக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசுக்கு எதிராகத்தான் போராடுகிறார்கள். இந்திய அரசு விடுதலைப் புலிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்றே கருதுகின்றேன். மலையகத் தமிழ்மக்களின் தொடரும் துன்பங்களுக்கு மலையகத் தலைமைகளின் தொடரும் துரோகமே காரணம் என்பதை மலையகத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எந்த ஆயுதத்தாலும் எத்தகைய குண்டு வீச்சாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட முடியாது’ என்றார். தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அமைப்பு 1984 இன் ஆரம்பப்பகுதியில் முதன் முதலாக பெண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் மறைமுகமாக ஆதரவு நல்கத் தொடங்கியவர்கள் பின்பு தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரனின் அனுமதியுடன் ஆயுதப்பயிற்சி பெற்று இந்திய – தமிழீழப் போர் 1987 ஐப்பசி 10 இல் ஆரம்பமாகிய போது நேரடியாக யுத்தமுனைக்குச் சென்று பல வீர சாதனைகளை இன்றுவரை படைத்து வருகிறார்கள். விடுதலைப் புலிகள் மகளிர் அமைப்புக் குறித்து தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் தெரிவிக்கையில் ‘எமது சமூகத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப் போராட்டத்தை ஒரு தேசிய போராட்டமாக முன்னெடுப்பது கடினம்.

இதனை உணர்ந்துதான் எமது இயக்கம் பெண் விடுதலையை முதன்மைப் படுத்தியது. பெண்களை அரசியல் மயப்படுத்தி போராட்டத்திற்கு அவர்களை அணி திரட்டியது. இவ்வகையில் நாம் தமிழீழப் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தி இருக்கிறோம். தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கிறது. காலம் காலமாக அடுக்களையில் அடங்கிப் போயிருந்த தமிழீழப் பெண்ணினம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கிறது. சீருடை தரித்து நிற்கிறது. காலம் காலமாக தூங்கிக் கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்துஇ எமது போராட்டத்தின் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கிறது. வீரத்திலும் தியாகத்திலும் விடுதலையுணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை எமது பெண் போராளிகள் தமது வீரசாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்” என்றார். விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பு ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைய தலை முறையினரின் கைகளிலேயே தங்கியுள்ளது. ஆகவே இளைய தலைமுறையினர் அறிவுள்ளவர்களாக ஆற்றல் மிகுந்தவர்களாக பொறுப்புணர்வு கொண்டவர்களாக வளர்க்கப்பட வேண்டியது ஒரு கட்டாயத் தேவை.

எனவே அதற்கேற்ற வகையில் இளஞ் சிறார்களுக்குக் கல்வி ஊட்டப்பட வேண்டியதும் மிக முக்கியமான தொன்றாகிறது. ஆகவேதான் எமது தேச மாணவர்களின் நலன் கருதிஇ தமிழீழத் தேசியத் தலைவரின் ஆணைப்படி உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் ‘விடுதலைப்புலிகள் மாணவர் அமைப்பு”. கடற்புலிகள் எமது ஆயுதப் போராட்டம் கடந்து வந்த ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் தமிழீழக் கடல் மிகப்பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது. 1984ம் ஆண்டு தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்இ கடற்புலிகள் படைப்பிரிவிற்கு அதன் வரலாற்று ரீதியான பிறப்பைக் கொடுத்து ஆரம்பத்தில் அதற்கு கடற்புலிகள் என்ற பெயர் சூட்டினார்ஸ்ரீலங்காக் கடற்படைக்குச் சவால்விடும் அளவிற்குஇ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணி இன்று வளர்ந்துள்ளது.

இவ்வமைப்பில் ஆண் போராளிகளின் அணியுடன்இ கடற்புலிகள் மகளிர் படை அணி 01-03-1992 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஆண்களின் பங்களிப்புக்குச் சமமான தமது பங்களிப்பை ஆற்றி சாதனை படைத்து வருகின்றனர். தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 1985 ல் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் தேவைபற்றி தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் குறிப்பிடும் போது ‘தமிழீழ மக்கள் இரு போர் முனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து மண்மீட்கும் போர்முனைஇ மற்றையது சிங்களப் பேரினவாத அரசின் பொருளாதாரத் தடைகள் என்னும் அடக்கு முறையை எதிர்த்து உற்பத்திப் போர்முனை. இதயம் எவ்வாறு குருதிச் சுற்றோட்டத்தை ஒழுங்கு படுத்தி நோய்களையும் பாதிப்புக்களையும் வென்றிட உடலுக்கு உதவுகின்றதோ அவ்வாறே தமிழர் புனர்வாழ்வுக் கழகமும் தமிழீழம் எங்கும் உழைப்பைக் குருதியாய் ஓட வைத்து தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியின் அத்திவாரமாக திகழ வேண்டும்” என்றார். இவ் அமைப்பின் வளர்ச்சியால் இன்று தமிழீழத்தில் பல குடும்பங்கள் நிவாரணத்தை நம்பி வாழாமல் தாமாகச் சுயதொழில் மூலம் வாழும் நிலையைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக்கழகம் வைகாசி 1994 வேளான் மன்னர்களுக்கு பரிசு அளித்து கௌரவித்து உரையாற்றிய தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் ‘தமிழீழம் ஒரு செழிப்பான பூமி வளங்கள் பல நிறைந்த தேசம் தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பி அதனை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்லக் கூடிய நீர் வளத்தையும் நில வளத்தையும் மனித தொழிலாக்க வளத்தையும் கொண்டது.

இயற்கையின் கொடையாக எமக்கு வழங்கப்பட்ட இந்த வளங்களை நாம் இனம் கண்டு அவற்றை உச்சப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். மக்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் திறமையான திட்டமிடுதலின் அடிப்படையில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். வேளாண்மையும் கைத்தொழிலுமே பொருண்மியக் கட்டுமானத்திற்கு அடித்தளமானது.

இந்த இரு துறைகளையும் கட்டி வளர்ப்பதில் நாம் முக்கிய கவனம் செலுத்துதல் வேண்டும். இந்த இலக்கில் ~ தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்~ ஆக்கபூர்வமான பல திட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது. இந்த முயற்சிகள் மேலும் மேலும் தீவிரம் பெற்றுஇ விடுதலை பெறும் தமிழீழம் தங்கு நிலையற்றதாக தன் காலில் தரித்து நின்று வளர்ச்சி பெறக்கூடியதாக அமைய வேண்டும்” என்றார். கரும்புலிகள் இலட்சியத்தில் இரும்பு மனிதர்கள் கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு 1993 ஆடி 5இல் தமிழீழத் தேசியத் தலைவர் விடுத்த அறிக்கையில்இ ‘கப்டன் மில்லருடன் கரும்புலிகளின் சகாப்தம் ஆரம்பம் ஆகியது. என்றுமே உலகம் கண்டிராத எண்ணிப் பார்க்கவும் முடியாத தியாகப் படையணி ஒன்று தமிழீழத்தில் உதயமாகியது.

கரும்புலிகள் வித்தியாசமானவர்கள். அப10ர்வமான பிறவிகள். இரும்பு போன்ற உறுதியும் பஞ்சு போன்ற நெஞ்சமும் கொண்டவர்கள். தங்களது அழிவில் மக்களது ஆக்கத்தைக் காணும் ஆழமான மனித நேயம் படைத்தவர்கள். கரும்புலி என்ற சொற்பதத்தில் கருமையை மனோ திடத்திற்கும் உறுதிப்பாட்டிற்குமே நாம் குறிப்பிடுகின்றோம். இன்னொரு அர்த்த பரிமாணத்தில் இருளையும் அது குறியீடு செய்யும். பார்வைக்குப் புலப்படாத பூடகமான இரகசியத் தன்மையையும் செயற்பாட்டையும் அது குறித்து நிற்கும். எனவே கரும்புலி என்ற சொல் பல அர்த்தங்களைக் குறிக்கும். ஆழமான படிவமாக அமையப் பெற்றிருக்கிறது. இந்த இரகசியத் தன்மை கரும்புலிகளின் செயற்பாட்டு வெற்றிக்கு மூலதாரமானது. இது கருப்புலிகளின் சகாப்தம். இந்தப் புதிய யுகத்தில் எமது போராட்டம் புதிய பரிமாணங்களில் விரியும். சாவுக்கு விலங்கிட்ட மறவர்கள் புதிய சரித்திரம் படைப்பார்கள். எமது சந்ததியின் விடிவுக்கு விளக்கேற்றி வைப்பார்கள்”இ என்று தெரிவித்தார். பங்குனி 8 பெண்கள் தினம் அனைத்துலக பெண்கள் தினமான பங்குனி 8இ 1992 இல் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுத்த அறிக்கையில்இ ‘பெண் விடுதலை எனும் பொழுது அரச ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளாதார சுரண்டல் முறையிலிருந்தும் பெண்ணினம் விடுதலை பெறுவதையே குறிக்கிறோம். எனவே எமது இயக்கம் வடிவமைத்துள்ள பெண் விடுதலைப் போராட்டமானது தேச விடுதலைஇ சமூக விடுதலைஇ பொருளாதார விடுதலை என்ற என்ற குறிக்கோள்களை கொண்ட மும்முனை விடுதலைப் போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆணாதிக்க ஒடுக்குமறைக்கு எதிரான போராட்டம் அல்ல.

இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டம். இந்தச் சிந்தாந்தப் போராட்டம் ஆண்களின் மனவுலக மாற்றத்தைக் குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும்” என்றார். தமிழீழ படைத்துறைப் பள்ளி 1991 புரட்டாதி 19ம் நாள் உருவாக்கப்பட்ட தமிழீழ படைத்துறைப் பள்ளியின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்இ ‘தமிழீழப் படைத்துறைப் பள்ளி எனது முயற்சிகளில் ஒன்று. எனது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றம் கொள்ளவேண்டும்.

ஆற்றல் மிகுந்தவர்களாகஇ புத்திசாலிகளாகஇ தேசப்பற்று உள்ளவர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாகஇ நிர்வாகிகளாகஇ ஆட்சியாளர்களாக உருப்பெற வேண்டும்” என்று கேட்டிருந்தார். செஞ்சோலை சிறுவர் இல்லம் யுத்த சூழ்நிலையால் பெற்றோரை பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பாரமரிப்புக்காக தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புரையின் பேரில் 1991 ஐப்பசி 23ம் நாள் செஞ்சோலை சிறுவர் இல்லம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தியில் ‘வரலாற்றுப் பெருமைமிக்க சுதந்திரப் போராட்ட சூழலில் இந்தச் செஞ்சோலை வளாகத்தில் நாம் இன்று இளம் விதைகளைப் பயிரிடுகின்றோம். இவை வேர்விட்டு வளர்ந்து விழுதுகள் பரப்பி விருட்சங்களாய் மாறி ஒரு காலம் தமிழீழ தேசத்தின் சிந்தனைச் சோலையாகச் செழிப்புற வேண்டும் என்பதே எனது ஆவல். இந்த புரட்சிகரமான பணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எனது நல்லாசிகள்” என்றார். தமிழீழ காவற்துறை 1991 கார்த்திகை 9ம் நாள் தமிழீழ மக்களின் நலன்களைப் பேணுவதை மட்டுமே நோக்கமாக வரித்துக்கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ~தமிழீழ காவற்துறை~யினது செயற்பாடுகள் அதிகாரபூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழீழ தேசியத் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட இக் காவல்துறை அவரின் நேரடிப் பொறுப்பின் கீழ் செயல்படட்டது.

இக்காவற்துறையின் செயற்பாடுகள் பற்றி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது ‘தமிழீழக் காவற்துறையினர் நல்லொழுக்கம்இ நேர்மைஇ கண்ணியம்இ கட்டுப்பாடு போன்ற சீரிய பண்புடையவர்களாக இருப்பார்கள். பொது மக்களுக்குச் சேவை செய்யும் மனப்பாங்குடன் சமூகநீதிக்கும் சமூக மேம்பாட்டுக்கும் உழைக்கும் மக்கள் தொண்டர்களாகவும் கடமையாற்றுவார்கள். எமது பண்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்களொடு அன்புடனும் பண்புடனும் பழகுவார்கள். சமூக விரோத குற்றச் செயல்கள் எவற்றுடனும் சம்பந்தப்படாதவர்களாகவும் தேசப்பற்று மிகுந்தவர்களாகவும் 24 மணி நேரமும் பணியாற்றுவார்கள். தமிழீழ காவற்துறையைப் பொறுத்தவரை குற்றங்கள் நடந்து முடிந்தபின் குற்றவாளியைத் தேடிப்பிடித்து கூட்டில் நிறுத்துவது அதன் நோக்கமல்ல. குற்றங்கள் நிகழாதவாறு தடுத்துக் குற்றச் செயல்களற்ற ஒரு சமூகத்தைக் கட்டி எழுப்புவதே அதன் இலட்சியமாகும்” என்றார். குறிப்பு சிங்கள காவற்துறையினரால் யாழ்.பொது நூலகம் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட நினைவு நாளான ஆனி 1ம் நாள் தமிழீழ காவற்துறையினர் தமது பயிற்சிகளைத் தொடங்கினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகள் கலைஇ பண்பாட்டுக் கழகம் எமது மொழியும் கலையும் பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது கலையும் பண்பாடும் எமது தேசத்தின் ஆன்மா. இந்த நோக்கத்திற்குச் செயல் வடிவம் கொடுக்கும் விடுதலைப் புலிகளின் கலைஇ பண்பாட்டுக் கழகத்தினரால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்கு 1992 ஆடி 15 இல் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அனுப்பிய செய்தியில்இ ‘எமது விடுதலைப் போராட்டத்தை மக்கள் மயமாக்கி மக்கள் போராட்டமாக முழுமைப்படுத்தி மக்கள் அரங்கிலிருந்து ஒரு பலமான உறுதிமிக்க தேசிய எதிர்ப்பியக்கத்தைக் கட்டி எழுப்பும் பணி இன்றைய வரலாற்றுத் தேவையாக எழுந்திருக்கிறது. இந்தத் தேவையை பூர்த்தி செய்வதில் எமதுஇ கலை இலக்கியப் படைப்பாளிகளின் பங்கு முக்கியமானது” என்று குறிப்பிட்டிருந்தார். புலிகளின் குரல் வானொலிச் சேவை புலிகளின் குரல் வானொலிச் சேவையின் ஓராண்டு பூர்த்தி நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ‘எமது எதிரியான சிங்கள அரசும் அதன் கைக்கூலிகளான தமிழ்த் துரோகக் குழுக்களும் எமக்கு எதிராக மிகவும் கேவலமான விஷமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றன. எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்றார்.

தமிழீழ சட்டக் கல்லூரி 1993 தை 25ம் நாள் தமிழீழ சட்டக் கல்லூரியில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உரையாறும் போது ‘தமிழீழத் தனியரசு என்ற இலக்கை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். அந்தத் தனியரசுக்கான அத்திவாரங்களை நாம் இப்போதிருந்தே கட்டியெழுப்ப வேண்டும். நீதித்துறை அரச நிர்வாக இயந்திரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் ஒரு நிறுவனம் என்பதால் இப்பொழுதிருந்தே இத்துறை சம்பந்தமாக எமது போராளிகளாகிய உங்களுக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. சமூக நிர்வாகத்தில் நீதித்துறை பிரதானமானது. நேர்மைஇ ஒழுக்கம்இ கண்ணியம்இ கட்டுப்பாடு ஆகிய பண்புகளைக் கொண்டவர்களே நீதிபரிபாலனத்தைக் கையாள வேண்டும். முன்பு நீதிபரிபாலனத்திற்கென நாம் உருவாக்கிய இணக்க மன்றுகள் என்ற அமைப்பில் பல தவறுகள் நிகழ்ந்ததை நீங்கள் அறிவீர்கள். இந்த இணக்க மன்றுகளால் வழங்கப்பட்ட தீர்ப்புகளும் மக்களின் விமர்சனத்திற்கும் கண்டனத்திற்கும் இலக்காகின. சுயநலமற்ற முறையில்இ பாரபட்சமற்ற முறையில் நீதி வழுவாது தீர்ப்புகள் வழங்கப்படவில்லை. எனவேதான் ஒழுங்கும் கட்டுப்பாடுமுடைய எமது இயக்கத்தைச் சேர்ந்த போராளிகளைக் கொண்ட நீதி நிர்வாகமானது ஒரு வலுவான அரசிற்கும் கட்டுப்பாடுடைய சமூக அமைப்பிற்கும் ஆணிவேரானது. சமூக நீதி சரிவரப் பேணப்பட்டால்தான் சமுதாயம் ஒரு உன்னத நிலைக்கு வளரும்” என்றார்.

தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை நடத்திய தமிழீழப் பொதுக்கல்வித் தேர்வில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி தமிழீழ தேசியத் தலைவர் வே. பிரபாகரன் 1993 மாசி 13 இல் வெளியிட்ட அறிக்கையில் ‘மனித வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வி ஆதாரமானது. ஆணிவேர் போன்றது. சமுதாய விடுதலைக்குத் தம்மை அர்ப்பணிக்கும் தெரிவிக்குமஇ; கல்வி கற்கும் உரிமைக்கும் இடையில் நாம் என்றுமே முரண்பாட்டைக் கற்பிக்க முயல- வில்லை. இரண்டுமே எமது சமூகத்தின் வாழ்வியக்கத்திற்கு இன்றியமை- யாதவை. போரும் கல்வியும் இணைந்த ஒரு வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும்.

இன்று தமிழீழத்தில் கல்வித்துறை சீரழிந்த நிலையில் உள்ளது. தமிழரின் கல்வியைத் திட்டமிட்ட வகையில் சிறீலங்கா அரசு புறக்கணித்து வருகிறது. எத்தனையோ நெருக்கடிகள் இடர்பாடுகளை எதிர்கொண்டு எமது மாணவர் சமூகம் கல்வியை கற்க வேண்டியிருக்கிறது. தமது ஆர்வத்தினாலும் திறமையினாலும் கடும் உழைப்பினாலும் கல்வி கற்றுப் பொதுத் தேர்வுக்கு தயாரானாலும் உரிய காலத்தில் அவை நடைபெறுவதில்லை. தேர்வு நடைபெறும் காலங்களிலும் அரச படைகள் அமைதியைக் குலைத்து விடுகின்றன. இத்தனை தடைகளையும் தாண்டித்தான் எமது மாணவர்கள் தேர்வுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் கணிதப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வுக்கு ஈடாக முதல் தடவையாக தமிழீழக்கல்வி மேம் பாட்டுப் பேரவை சிறப்புற நடாத்தி முடித்திருக்கிறது. இந்த முயற்சியை நான் மனப் பூர்வமாக பாராட்டுவதுடன் இத்தேர்வில் தோற்றிய தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். தமிழீழ நீதித்துறையின் நீதியாளர், சட்டவாளர்களின் சத்தியப் பிரமாணம் 1993 ஆவணி 19 இல் தமிழீழ நீதித்துறையின் நீதியாளர் சட்டவாளர் ஆகியோரின் சத்தியப் பிரமாண வைபவத்தில் ஆற்றிய சொற்பொழிவில் ‘போராளிகள் நீதியாளர்களாகவும் சட்டவாளர்களாகவும் பொறுப்பை ஏற்றால் தமது பிரச்சினைகளை நேர்மையாக அணுகி சரியான முறையில் நீதி வழங்குவார்கள் என எமது மக்கள் எதிர்பார்க்கிறார்கள். போராளிகள் ஒரு உன்னத குறிக்கோளுக்காக தமது உயிரையும் துறக்கத் தயாராகவுள்ள இலட்சியவாதிகள் என்பதை பொதுமக்கள் அறிவார்கள். எனவே போராளிகளாகிய நீங்கள் நீதி நிர்வாகத்தை பொறுப்பேற்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் ;;நேர்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயவாற்றுவீர்கள் என நம்புகிறேன். கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு என்பார்கள். இந்த உண்மையின் அடிப்படையில் நீங்கள் உலக அனுபவத்திலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முயல வேண்டும். அனுபவம் மூலமாகவே நீங்கள் நிறைந்த அறிவைப் பெற்றுக் கொள்ளலாம். மக்களின் உணர்வுகளைப் புரிந்து அவர்களின் முரண்பாடுகளைக் களைந்து அவர்களுக்கு நீதி வழங்குவதை உங்கள் கடமையாகக் கொள்ளவேண்டும். நேர்மையாகவும் உண்மையாகவும் செயற்படுவதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் எப்போதும் நேர்மை தவறாது சத்தியத்தின் வழியில் நீங்களும் உங்களது கடமையைச் செய்ய வேண்டும். அதற்கான உறுதியும் துணிவும் உங்களிடம் இருக்க வேண்டும்” என்றார். காந்தரூபன் அறிவுச்சோலை 1993 காhத்திகை 13ம் நாள் காந்தரூபன் அறிவுச் சோலை தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாரனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது அவர் ஆற்றிய உரையில் ‘எல்லோருக்கும் பொது அன்னையான தமிழ் அன்னை இந்தச் சிறுவர்களைத் தாயாக அரவணைத்திருக்கிறாள். எமது போராளிகள் அனைவருமே இவர்களது சகோதரர்கள். எமது இயக்கம் என்னும் மாபெரும் குடும்பத்தில் இவர்கள் இணைபிரியாத அங்கமாக இணைந்து உள்ளனர். தனிக்குடும்பம் அந்தக் குடும்பத்தை சுற்றி உறவுகள் என்ற வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் ஒரு பரந்த வாழ்வையும் விரிந்த உறவுகளையும் வைத்துக் கொண்டுவளரப்போகும் இவர்கள் எதிர்காலத்தில் எமது தேசத்தின் சிற்பிகளாகத் திழ்வார்கள் என்பது திண்ணம். இந்தச் சமூகச் சூழலில் இவர்களிடம் மண்பற்றும் மக்கள் பற்றும் ஆழமாக வேரூ ஈடுபடுகின்றோம். ஆனால் இத்தகைய சமூக சேவைகள் வெற்றி பெற சமுதாயம் தனது ஆக்கபூர்வமான உதவிகளை மனப்பூர்வமாக வழங்க வேண்டும்” என்று கூறினார்.

குறிப்பு- பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த காந்தரூபன் என்ற இளைஞன் தானே விரும்பி தலைவரிடம் கேட்டு கரும்புலியாய் சென்று வீரச்சாவை தழுவிக் கொண்டார். இம் மாவீரன் தலைவர் பிரபாகரனிடம் ‘யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப் புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப் போல்இ தமிழீழத்தில் அநாதைகளாக வாழும் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின் ஆசையை நிறைவேற்றும் முகமாக காந்தரூபன் அறிவுச்சோலை எனப் பெயரிடப்பட்டது.

புலிகளின் உள் கட்டமைப்பு லெப் சாள்ஸ் அன்ரனி சிறப்புபடையணி மேஐர் சோதியா படையணி லெப் கேணல் குட்டிசிறி படையணி லெப் கேணல் விக்ரர் படையணி தமிழீழ தேசிய துணைப்படை கப்டன் ஜெயந்தன் படையணி 2ம்லெப் மாலதி படையணி இம்ரான் பாண்டியன் படையணி புலிகளின் உள் கட்டமைப்புகள் கடற்புலிகள்

1)சாள்ஸ் படையணி
2)அங்கைய கண்ணி நீரடி நீர்ச்சல் பிரிவு
3)நிறோயன் நீரடி நீர்ச்சல் பிரிவு
4)ஈரூடக தாக்குதல் படையணி
5)கடற்படை படகு கட்டுமான பிரிவு
6)கடற்கரும்புலிகள் அணி
7)கடற்சிறுத்தை படையணி

வான்புலிகள்
1)ராதா வான் காப்பு படையணி
2)விமான தாக்குதல் படையணி தரைப்படை
1) சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி
2) ஜெயந்தன் படையணி
3) இம்ரான் பாண்டியன் படையணி
4) யாழ் செல்லும் படையணி
5) புலனாய்வுத்துறை தாக்குதல் படையணி
6) சோதியா படையணி
7) அன்பரசி படையணி
8) மாலதி படையணி
9) சிறுத்தை படையணி
10)தரைக்கரும் புலிகள் படையணி
11)பொன்னம்மான் கண்ணி வெடி பிரிவு
12)கிட்டு பீராங்கி படையணி
13)விக்ரர் விசேடகவச எதிர்ப்பு படையணி
14)லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி
15)மகளிர் அரசியல் துறை தாக்குதல் படையணி
16)இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி
17)எல்லை படை
18)துணைப்படை அறிவியல்

1) வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு
2)கணிணி தொழில்நுட்ப பிரிவு
3)இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு
4) போர்கருவி தொழிற்சாலை
5)தமிழீழ இராணுவ விஞ்ஞான கல்லூரி அரசியல் துறை

1) பரப்புரை பிரிவு
2) தமிழீழ பொறியியல் துறை
3) தமிழீழ விளையாட்டு துறை
4) விடுதலைப்புலிகளின் ஆங்கில கல்லூரி
5) திரைப்படபுத்தக மொழிபெயர்ப்பு துறை
6) தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியல் பிரிவு
7) தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம்
8) தமிழீழ கலை பண்பாட்டு கழகம்
9) விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு
10)சூழல் நல்லாட்சி ஆணையம்
11)தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு
12)பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
13)பொருண்மிய மதியுரைகம்
14)தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம் 1
5)ஓளிக்கலைப்பிரிவு
16)தமிழிழ தேசிய தெலைக்காட்சி
17)நிதர்சனம்
18)ஒளி வீச்சு ஒலிபரப்பு
19)புலிகளின் குரல் பத்திரிகை
20)புலிகளின் குரல் தமிழீழ வானொலி
21)ஈழநாதம்
22)சுதந்திரப் பறவைகள்
23)விடுதலைப்புலிகள் ஏடு
24)மருத்துவ பிரிவு
25)திலீபன் மருத்துவ சேவை

தமிழீழ காவல்துறை
1)குற்றதடுப்புபிரிவு
2)விசாரணை பிரிவு
3)வீதி போக்குவத்து கண்காணிப்பு பிரிவு
4)தமிழீழ காவல்துறை தாக்குதல் படையணி
தமிழீழ நீதித்துறை

*தமிழீழ நீதி மன்றம் *
சட்ட ஆக்க கழகம் புலனாய்வுத் துறை நிதித்துறை
*தமிழீழ நிர்வாக நிதிபிரிவு
*தமிழீழ வழங்கல் பிரிவு
*தமிழீழ வங்கி
*கொள்முதல் பிரிவு தமிழீழ பேக்குவரத்து கழகம்

உலகில் எந்த யுத்த களத்திலும் அதியுச்ச போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறுகலான சிறிய இடத்தில் வைத்து அந்தப் போராட்ட வேளையிலே யுத்த கோரத்தாண்டவங்களை நேரடியாக எவரும் ஒலிப்பரப்பு செய்து கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால், விடுதலைப் புலிகளோ… கடும் யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வைத்து தவபாலன் (இறைவன்) என்ற போராளி தான் சுடப்பட்டு இறக்கும் வரை “புலிகளின் குரலை” இறுதி வரை ஒலிக்கச் செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சில போராளிகளும் பட ஒளிப்பதிவுகள் செய்தமையால்தான் மக்களின் பேரவலங்கள் இன்று உலகின் பார்வைக்கு வந்தது! பின்னால், சிங்கள இராணுவ வீரர்கள் தங்கள் கைகளில் அகப்பட்ட இளைஞர்கள், யுவதிகளையும், சில போராளிகளையும், பன்னிரெண்டு வயதேயான பாலச்சந்திரனையும் சுட்டுக்கொல்வதை தங்கள் கைபேசியூடாக படம் பிடித்து வைத்திருந்ததை சில சுயலாபங்களுக்காக வெளியிட்டிருந்தனர்.

(இன்னும் நிறைய வரலாம்) மக்களோடு மக்களாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகளை இனம் காண சிங்களப் படைகளால் முடியாமல் போகவே, சில பொது மக்களை பிடித்து துன்புறுத்தி மிரட்டியதால் அந்த மக்கள் மூலம் சில போராளிகள் இனம் காணப்பட்டார்கள். சிலரை ஒலிபெருக்கிகள் மூலம் “சரணடையுமாறு” அறிவுறுத்தப் பட்டுக்கொண்டிருக்கையில் தங்கள் பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் தங்களால் பாதிப்படையக்கூடாது என்பற்காக தாங்களாகவே முன் வந்து சரணடைந்தார்கள்.

சில போராளிகளுக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் இல்லாததால் அவர்கள் சரணடையாமல் மக்களோடு மக்களாகவே வாழ்கின்றனர்.

இக்கருத்துக்களை ஏன் இங்கே பதிவு செய்கிறேன் என்றால், “மக்கள் வேறு, புலிகள் வேறு” என்று புலம்பிக் கொண்டிருக்கும் சில சர்வதேச பரப்புரையாளர்களுக்கு தெளிவுபடுத்தத்தான். இனியாவது புரிந்து கொள்ளுங்கள்… அங்கே, இறுதிவரை போராடியது அங்கே வாழ்ந்து கொண்டிருந்த ஈழமக்களுக்குச் சொந்தமான புலிகள்தான் என்று! இனி ஒரு போதும் மக்களையும் புலிகளையும் பிரித்து எந்த சக்திகளாலும் இனம் காணமுடியாது!.

இவைகள் ஒரு புறமிருக்க, விடுதலைப் புலிகளின் பலத்தையும், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக எழுந்த பேராதரவையும் பார்ப்போம். இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல்… எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளுமின்றி எந்த நோக்கத்திற்காக விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்களோ… அந்த நோக்கத்தின் அடிப்படையில் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கினார்கள்.

பிறந்த குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருக்கும் சென்றடையக்கூடிய சகலவிதமான நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள். காவல்துறையில் இருந்து நீதிமன்றுகள், வங்கிகள், தொலைக்காட்சி சேவைகள், வானொலி சேவைகள், பத்திரிகைகள் என ஓர் அரசாங்கத்திற்குத் தேவையான… இன்னும் ஏராளமான கட்டமைப்புக்களை உருவாக்கியிருந்தனர்.

உலக வரலாற்றில் தனித்தனி நாடுகள் வைத்து அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ நாடுகள் வறுமை, வறட்சி, உணவுப் பஞ்சம், கலாச்சார சீரழிவு மற்றும் மக்களை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க முடியாமல், அந்த மக்களே அரசைக் கலைத்து ஆட்சிக் கவிழ்ப்பு செய்த வரலாறுகளும் நிறைய உண்டு! இந்த நாடுகளுக்கெல்லாம் பலநாட்டு உதவிகள் கிடைத்தும், தனிநாடு, தனி அரசாட்சி என்று இருந்தும் அங்கு எல்லாக் கொடுமைகளும் இன்றும், இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது! உலக நாடுகளின் பாரிய உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் பல தடைகளைப் போட்டு ஒரு சிறுபான்மை இன மக்களை நசுக்கிக் கொண்டு வர, அந்த மக்களே விழிப்படைந்து,

எழுச்சியடைந்து எந்த நாட்டு உதவிகளுமின்றி விடுதலைப் புலிகளாக உருவாகி திருப்பித் தாக்கத் தொடங்கி கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக போராடி தமக்கான ஒரு சுதந்திர தேசத்தை உருவாக்கியிருந்தார்கள். பூகோள ரீதியாக இந்தியா தவிர வேறு எந்த நாடுகளும் அருகினில் இல்லை. இந்தியா கூட கடல் கடந்துதான் இருக்கிறது! உதவிகள் கேட்டு ஓடவும், உயிரைப் பாதுகாக்க வேறு இடங்களில் போய் பதுங்கிக் கொள்ளவும் எந்தவிதமான பாரிய இடங்களும் இல்லை! ஒரு சிறிய தேசம் அது! அந்தச் சின்னஞ்சிறிய தேசத்தில் துறைமுக வசதிகள் இல்லை, விமானத்தளங்கள் இல்லை, சீரான போக்குவரத்து வசதிகள் இல்லை, எரிபொருள் வளங்கள் இல்லை, எந்தவிதமான மூலவளங்களும் இல்லை..! அழுத்தங்கள் இன்னும் நிறைய இருந்தும்…. எப்படி உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு ஒரு விடுதலைப் படையை உருவாக்கி முப்படைகளையும் கட்டியமைத்து தனியாக ஒரு தேசத்தை உருவாக்கி (ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளாதது மட்டும்தான்) தனி அரசாங்கத்தை நடத்திக் காட்ட முடிந்தது? உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல் வளர்ந்ததும் இல்லை!, வாழ்ந்ததும் இல்லை! இந்த இருபத்தியோராம் நூற்றாண்டுவரை உலகில் எந்த விடுதலை அமைப்பு, விடுதலைப் புலிகள் போல் போராடினார்கள்?

* உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பும் தனக்கென தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை! * உலகில் வாழும் எந்தவொரு விடுதலை அமைப்பினரும் போரில் இறந்த தங்கள் வீரர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி கல்லறைகள் (துயிலும் இல்லங்கள்) கட்டியதில்லை! * உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பும் முப்பாதாயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை இழந்ததில்லை! * உலகில் எந்தவொரு விடுதலை அமைப்பினருக்கும் ஏராளமான சமூக, போராட்ட, செய்தி இணையதளங்கள் இருந்ததில்லை!

* முகநூல்களிலும் (facebook) வேறு சமூக, செய்தி இணையத்தளங்களிலும் தலைவர் பிரபாகரன் பற்றியும், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றியும் வந்தது போல், வேறு எந்த விடுதலை அமைப்பினர் பற்றியும் பரவலாக வந்ததில்லை! *

விடுதலைப் புலிகளுக்கு உலகினில் வாழும் அனைத்து தமிழர்களிடமும் இருந்து கிடைக்கப் பெற்ற பெரும் செல்வாக்கு போல், உலகினில் வாழும் வேறு எந்த விடுதலை அமைப்புக்கும் கிடைத்ததில்லை! * விடுதலைப் புலிகள் தீவிரவாத இயக்கம் என்றால்… எப்படி முப்படைகளையும் கொண்ட மரபுவழி இராணுவமாக வளர முடிந்தது? அது எப்படி சாத்தியாமானது? * அவர்கள் தீவிரவாதிகள் என்றால், எப்படி மக்களின் பெருபலம் அவர்களுக்குக் கிடைத்தது? பிறகு ஏன் விடுதலைப் புலிகளை முப்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் சேர்ந்து அழிக்க வந்தன…?

அந்த சிறிய தேசத்தில் இருந்து அவர்கள் வளர்ந்த அசுர வளர்ச்சிதான் காரணம்! அவர்களின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அவர்களையும், அவர்களின் போராட்டத்தையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்து மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்து, போராளிகளை கொன்றும், சில போராளிகளைக் கைது செய்தும் சகல இடங்களையும் கைப்பற்றினார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைத்ததோ விடுதலைப் புலிகளின் சில ஆயுதங்கள் மட்டுமே! அவ்வாறெனில் சில நூற்றுக்கணக்கான தளபதிகளும், பல ஆயிரக்கணக்கான போராளிகளும் எங்கே போனார்கள்? அவர்கள்தான் அங்கிருந்த தமிழ் பேசும் மக்கள் என்பதை இன்றுவரையும் விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” என்று சொல்லும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை! இன்று வரையும் சில சர்வதேச நாடுகளாலும், சில விசக்கிருமிகளாலும் “தீவிரவாதி” என்றழைக்கப்படும் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு தனி மனிதனாக ஒரு விடுதலைப் படையை உருவாக்கி, மக்களுக்கான பல நன்மைகளும், பயன் பெறக்கூடியதுமான பல உள்கட்டமைப்புக்களை உருவாக்கினார். அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு

: * தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு. * தமிழீழ வைப்பகம். * தமிழர் புனர்வாழ்வுக் கழகம். * தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம். * சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி. * கிராமிய அபிவிருத்தி வங்கி. * அனைத்துலகச் செயலகம். * நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)

* சுங்க வரித்துறை. * தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம். * அரசறிவியற் கல்லூரி. * வன வளத்துறை. * தமிழீழ நிதித்துறை. * தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள். * கலை பண்பாட்டுக்கழகம். * மருத்துவப் பிரிவு. * திலீபன் சிறப்பு மருத்துவமனை. * பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை. * மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு. * சுகாதாரப் பிரிவு. * ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு. * போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு. * நிர்வாக சேவை. * அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம். * மீன்பிடி வளத்துறை. * விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு) * தொழில் நுட்பக் கல்லூரி. * சூழல் நல்லாட்சி ஆணையம். * தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை. * தமிழீழ விளையாட்டுத்துறை. * தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம். * தமிழீழ போக்குவரவுக் கழகம். * மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு). * வளங்கள் பகுதி. * மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு) * விலங்கியல் பண்ணைகள். * விவசாயத் திணைக்களம். * தமிழ்மொழி காப்பகம். * தமிழீழ சட்டக்கல்லூரி. * தமிழீழ கல்விக் கழகம். * தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை. * காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது) . * செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது). * செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது). * வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது) * அன்பு முதியோர் பேணலகம். * இனிய வாழ்வு இல்லம். * சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது). * நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது) * மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது) * சீர்திருத்தப் பள்ளி. * முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி). * உதயதாரகை (விதவைகளுக்கானது). * பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம். * பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது). * எழுகை தையல் பயிற்சி மையம். * மாணவர் அமைப்பு. * பொத்தகசாலை (அறிவு அமுது). * ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு. * நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு). * தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது). * விடுதலைப்புலிகள் செய்தி இதழ். * சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்). * ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை). * வெளிச்சம் (மாத சஞ்சிகை). * நாற்று (மாத சஞ்சிகை). * பொற்காலம் வண்ணக் கலையகம். * அருச்சுனா புகைப்படக் கலையகம். * ஒளிநிலா திரையரங்கு. * புலிகளின் குரல் வானொலி. * தமிழீழ வானொலி. * தமிழீழ தேசியத் தொலைக்காட்சி. * பல சமூக செய்தி இணையத் தளங்கள். * தமிழீழ இசைக்குழு. * காலணி (பாதணி உற்பத்தி மையம்) * சேரன் உற்பத்திப் பிரிவு. * சேரன் வாணிபம். * சேரன் சுவையகம். * சேரன் வெதுப்பகம். * சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி). * பாண்டியன் உற்பத்திப் பிரிவு. * பாண்டியன் சுவையூற்று. * பாண்டியன் பல்பொருள் வாணிபம். * சோழன் தயாரிப்புகள். * பொன்னம்மான் உரைவகை வாணிபம். * தென்றல் இலத்திரனியலகம். * தமிழ்மதி நகை மாடம். * தமிழ்நிலா நகை மாடம். * தமிழரசி நகை மாடம். * அந்திவானம் பதிப்பகம். * இளந்தென்றல் குடிவகைப் பிரிவு. * இளவேனில் எரிபொருள் நிலையம். * இளந்தென்றல் தங்ககம் (Lodge). * 1-9 தங்ககம் (Lodge) * மருதம் வாணிபம். * மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்) . * மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி). * கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை. * மாவீரர் அரங்குகள். * மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள். * மாவீரர் நினைவு வீதிகள். * மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள். * மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம். * மாவீரர் நினைவுப் பூங்காக்கள். * மாவீரர் நினைவுப் படிப்பகங்கள். * மாவீரர் நினைவு நூலகங்கள். * மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம். * மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது) இது தவிர இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டுள்ளது.

Leave a comment