அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நைஜீரிய அதிபர் சந்திப்பு

273 0

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், நைஜீரிய அதிபரை சந்தித்து பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இருந்தும் இதுவரை ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த தலைவர்கள் யாரும் அமெரிக்கா சென்று அதிபரை சந்திக்கவில்லை.

இந்த நிலையில் அவர் ஆப்பிரிக்க நாடான நைஜீரிய அதிபர் முகமது புகாரிக்கு அழைப்பு விடுத்தார். அதை எற்று அவர் வாஷிங்டன் சென்றுள்ளார்.

இன்று வெள்ளை மாளிகையில் அவர் அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். அப்போது பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாத ஒழிப்பு குறித்து விவாதிக்கப்படுகின்றது.

நைஜீரியாவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் போகோஹாரம் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதில் நைஜீரிய அதிபர் புகாரி தீவிரமாக உள்ளார். எனவே பேச்சு வார்த்தையில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கை குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படுகிறது.

Leave a comment