காமன்வெல்த் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக இளவரசர் சார்லஸ் – ராணி எலிசபெத்

207 0

காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளில் உச்சி மாநாட்டை பிரிட்டன் ராணி எலிசபெத் நேற்று(19) தொடங்கி வைத்தார். தனக்கு பிறகு இளவரசர் சார்லஸ் காமன்வெல்த் கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவார் என அவர் தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் கூட்டமைப்பு நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு லண்டன் பங்கிங்காம் அரண்மனையில் இன்று தொடங்கியது. பிரிட்டன் ராணி எலிசபெத் மாநாட்டை தொடங்கி வைத்தார். காமன்வெல்த் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள 53 நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். மாநாட்டில் 91 வயதான எலிசபெத் பேசும் போது காமன்வெல்த் கூட்டமைப்பை தனக்கு பிறகு இளவரசர் சார்லஸ் தலைமை தாங்குவார் என தெரிவித்தார். சார்லஸ் தலைமைக்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என ராணி எலிசபெத் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராணி எலிசபெத்துக்கு பின்னர் காமன்வெல்த் கூட்டமைப்புக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு இளவரசர் சார்லஸுக்கு தானாக வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பு நாடுகளின் ஒப்புதல் பெற்ற பின்னரே தலைமை பொறுப்புக்கு சார்லஸ் வரமுடியும். இதற்கான பணிகள் நாளை நடக்கும் என கூறப்படுகிறது.

Leave a comment