ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய பார்சல்

9268 215

மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற விமானத்தில் பயணி ஒருவர் மறதி காரணமாக பையின் மீது பாம் என எழுதி வைத்திருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையை சேர்ந்தவர் வெங்கடலட்சுமி. இவரது மகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் தங்கியுள்ளார். அவரது பிறந்த நாளை கொண்டாட அவர் பிரிஸ்பன் நகருக்கு மும்பையில் இருந்து விமானத்தில் சென்றார்.

அவருக்கு மறதிநோய் உள்ளது. இதற்கிடையே தான் கொண்டுபோன பையில் வைத்திருந்த பெரிய கருப்புநிற பார்சலில் பாம் டூ பிரிஸ்பன் என எழுதியிருந்தார். இதை அவருடன் பயணம் செய்த சக பயணி பார்த்தார். பாம் என எழுதியிருந்ததால் அது வெடிகுண்டு பார்சலாக இருக்கும் என சந்தேகப்பட்டார்.

அதுகுறித்து விமானத்தில் இருந்த மற்ற பயணிகளுக்கும் கூறினார். இதனால் அனைவரும் பீதியில் இருந்தனர். இதற்கிடையே விமானம் பிரிஸ்பனில் தரை இறங்கியது. அங்கு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது.

அவரை தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு மறதி நோய் இருப்பதால் பார்சலின் மீது பாம்பே டூ பிரிஸ்பன் என்பதற்கு பதிலாக அதில் இடம் இல்லாததால் பாம் என எழுதியிருப்பதாக அவர் கூறினார். கீழே மும்பை என்று சிறியதாக எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதை தொடர்ந்து அவரது பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் துணிகளை தவிர வேறு எதுவும் இல்லை. உடனே அவர் விடுவிக்கப்பட்டார்.

Leave a comment