தேசியத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது!

9591 50

தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது.

இலங்கையில் தமிழீழம் அமைய வேண்டும் என்ற நோக்குடன் காணப்பட்ட, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நீலம், உனக்குள் நான், லைட்மேன் ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ் குமார் இந்த படத்தை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்னுடைய ஸ்ரூடியோ 18 நிறுவனத்தின் மூலமே இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a comment