காணாமற்போனோரின் உறவுகளை சந்தித்தார் கருணாஸ்!!

700 0

காணாமல்போனவர்களின் உறவுகளை பிரபல நகைச்சுவை நடிகரும், தமிழக சட்டசபையின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் (கருணாநிதி) சந்தித்துள்ளார்.

மேற்படி சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சந்திப்பில் காணாமல்போனவர்களின் உறவுகளுடன் கலந்துரையாடிய கருணாஸ் அவர்களின் தற்போதைய நிலைவரம் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.

தமிழகத்தில் ஈழச் சிறுவர்களின் கல்விக்காகப் பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸ் கட்டியுள்ள பாடசாலையைத் திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் வந்துள்ளார்.இதன்படி,  வடக்கு மாகாண முதலமைச்சரை இன்று காலை முதலமைச்சரின் இல்லத்தில் சந்தித்துக் குறித்த அழைப்பிதழை வழங்கியபின்னர் காணாமல்போனவர்களின் உறவுகளைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment