பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கவில்லை, கல்விமயமாக்குகிறோம் – தமிழிசை

10721 53

பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கவில்லை என்றும் கல்விமயமாக்கவே முயற்சிப்பதாகவும் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். 

பா.ஜ.க. நிறுவன நாளை முன்னிட்டு சென்னை பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து கூறியதாவது?

பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கவில்லை; கல்விமயமாக்கவே முயல்கிறோம். திறமையின் அடிப்படையிலேயே துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் அரசியலை புகுத்தாதீர்கள்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தகுதியான சூரப்பா நியமிக்கப்பட்டிருப்பதை, அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது

மாற்றம் தேவையான நிலையில் தமிழகத்தை போராட்டக் களமாக மாற்றி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment