மைத்திரிக்கு ஒரு கடிதம்!

744 0

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் விடுதலையை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர்களால் மீண்டும் ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்தப் பாடல் புலம்பெயர் தமிழர்களால் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனிசை செல்லப்பாவால் அரசியல் கைதி சுதாகரனின் விடுதலைக்காக பாடப்பட்ட இந்தப் பாடல் அனைவரின் மனங்களை நெகிழ வைத்துள்ளது.

தேனிசை செல்லப்பா என்ற பெயரும் அவரின் அசாதாரண இசை அர்ப்பணிப்பும் அனைவரும் அறிந்ததே. உலக நாடுகள் முழுக்க அவர் பாடலால் அறியப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகளில் தற்போதைய நிலை கருதியும், அவரின் விடுதலையை வலியுறுத்தியும் தேனிசை செல்லப்பாவினால் பாடல் ஒன்று பாடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலின் வரிகள் இதோ,

மைத்திரிக்கு ஒரு கடிதம்
ஐயா மனம் திறந்து இதைப் படியும்..
மைத்திரிக்கு ஒரு கடிதம்
ஐயா மனம் திறந்து இதைப் படியும்..

உங்கள் பிள்ளைகளின் திருவுருவம்
இல்லையா இவர் வடிவம்..
உங்கள் பிள்ளைகளின் திருவுருவம்
இல்லையா இவர் வடிவம்..

பெத்தவளை இழந்துவிட்டோம்
பேதைகள் நாம் தனித்து விட்டோம்..

நீங்கள் மனம் திறந்துவிட்டால்
நாங்கள் நலம் அடைந்திருப்போம்

எம் தந்தையை அணைத்திருப்போம்..

நாட்டு மக்கள் மனங்களெல்லாம்
எங்கள் நல்வாழ்வை நினைக்கிறது..
வீட்டில் ரெண்டு சிறு குருவி
கொடும் தனிமையில் தவிக்கிறது..

சிறை அறை திரையினுள்ளே
ஒரு மனம் துடிக்கிறது..
சிந்தும் விழி நீர் சொறிந்து
குஞ்சுகளை நினைக்கிறது..

மன்னிப்பும் ஒரு கொடை தான்
மறுவாழ்வும் நடைமுறை தான்..
சட்டத்தின் நெகிழ்வுகளும்
நாட்டு மக்கள் நலம் பெறத்தான்…

மழலைகள் நிலையுணர்ந்து
விடுதலை கொடுத்துவிடும்..
மக்கள் மனம் மகிழ்ந்து விடும்
மானுடம் சிறந்து விடும்…

என்று இந்த பாடல் முடிகிறது . ஒருமுறை இந்த பாடலை கேட்கும் போது இன்னும் ஆயிரம் தடவை கேட்கலாம் என்று தோண்றுகிறது.

தேனிசை செல்லப்பாவின் குரல் தமிழீழ வரலாற்றில் மிகபெரிய மாற்றத்தை கொண்டுவந்தது. “மக்கள் எல்லாம், மக்கள் எல்லாம் பிரபாகரன் பக்கம்”
இது காசி ஆனந்தன் வரிகளில், தேனிசை செல்லப்பா இசையமைத்துப் பாடிய பாடல். இந்த பாடல் ஏற்படுத்திய புரட்சிபோல், ஆனந்த சுதாகரினதும், இன்னும் அவர் போல சிறைகளில் வாடும் அனைத்து அரசியல் கைதிகளினதும் வாழ்விலும், அவர் பாடிய இந்த பாடலும் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பது TAMIL NEWS இன்
எதிர்பார்ப்பாகும். ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் முதல் முயற்சியை நாங்கள்தான் ( TAMIL NEWS ) மேற்கொண்டு இருந்தோம்.

சாதாரண ஒரு அரசியல் கைதியின், மனைவியின் சாவுவீட்டு செய்தியாக இல்லாமல்,
யார் இந்த ஆனந்த சுதாகரன் யார் ? இந்த தந்தை? உண்மையான போராளி? பொய்யான குற்றவாளி? உண்மையில் நிரபராதி! என்ற மிகச்சரியன் செய்தியையும், அவர் உண்மையில் நிரபராதி என்பதையும் ,
தமிழர்களுக்காகத்தான் நேரடியாகவே இந்த சிறைவாழ்க்கையை அனுபவிக்கின்றார் என்ற உண்மையையும், ஆணித்தரமாக வெளியிட்டு இருந்தோம்.

அந்த செய்தியின் வீச்சு, ஒட்டுமொத்த மக்களையும், ஊடகங்களையும், சமூக நலன் விரும்பிகளையும், அரசியல்வாதிகளையும் திசைதிருப்பி இருந்தது.

ஆனாலும் எமது சமூகம் மறதிக்கு அடிமையாகி, மாகாணசபை அரசியல், ரணிலை மாற்றவேண்டும் என்று கூவத்தொடங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், தேனிசை செல்லப்பாவின் உணர்ச்சிமிகு புரட்சி குரலில், இந்த உண்மை வரிகள் பாடலாக வெளிவந்து இருக்கிறது.

பலலட்சம் தமிழர்களுக்கு இந்த பாடலை கேட்கும் பொழுது, உங்கள் ஊர்களில் வாழ்ந்த, அந்த வீதிகளில் புலிமறவர்களுடன் ஒன்றாக திரிந்த நினைவுகளும், மீண்டும் ….. வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அந்த உணர்ச்சி பெருக்கு ஏற்படும் என்பதும், உடல் புல்லரிக்கும் என்பதும் எங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை

அனைவர்க்கும் இந்த பாடல் சென்றுசேர.. என்ன செய்ய வேண்டும் என்பதை…… நீங்களே செய்யுங்கள் ! ஏனென்றால்?

சொல்லாமல் செய்வோர் பெரியார்…..

சொல்லாமல் செய்வோர் பெரியோர்- (நீங்கள்)
சொல்லி செய்வோர் சிறியோர் (யாரோ)
சொல்லியும் செய்யாதோர் இழியோர் (இங்கே யாரும் இல்லை என்ன நம்புவோம்)

Leave a comment