அ.தி.மு.க. அவைத்தலைவராக இருந்து வரும் மதுசூதனன் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அ.தி.மு.க.வின் அவைத்தலைவராக இருந்து வருபவர் மதுசூதனன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் வசித்துவரும் மதுசூதனனுக்கு இன்று இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பல்லோ மருத்துவமனையில் மதுசூதனன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

