மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கை வைத்தால் மக்களை ஒன்று திரட்டி போராடுவேன்- வைகோ

11876 0

மூலக்கொத்தளம் சுடுகாட்டில் கட்டிட பணிகளை அரசு தொடருமேயானால் மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தை நடத்துவேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் அமைந்துள்ள சென்னை மூலக்கொத்தளம் சுடுகாட்டிற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை பார்வையிட்டார். அப்பகுதில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த சுடுகாடு 300 - 400 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு 1938-ல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நடராஜன் கல்லறை மற்றும் தாளமுத்து நடராஜன், முத்துக்குமாரின் எரியூட்டப்பட்ட நினைவிடம் உள்ளது.

தமிழக அரசு சார்பில் குடிசை மாற்று வாரியம் மூலம் குடியிருப்புகள் கட்டுவதற்கு ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட சுடுகாட்டை 4 ஏக்கர் கையகப்படுத்தி முதல் கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

மூலக்கொத்தளம் சுடுகாட்டிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் இந்த பணிகளை அரசு தொடருமேயானால் 10 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி போராட்டத்தை நடத்துவேன். இந்த சுடுகாட்டில் உள்ள மைதானத்தில் விளையாடிய மாணவர்கள், மாநில, தேசிய அளவில் வீரர்களாக உருவாகி உள்ளனர்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு எஸ்.சி- எஸ்.டி. கமி‌ஷனின் ஆணையத்தில் உள்ளது. தொடர்ந்து காவல்துறையினரால் இங்குள்ள மக்கள் மிரட்டுப்படுகிறார்கள். போராட்டம் நடத்துபவர்களை வண்ணாரப்பேட்டை இன்ஸ்பெக்டர் மிரட்டுகிறார்.

நான் மக்களை திரட்டி போராடும் போது முடிந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கட்டும்.

கிராமத்தில் உள்ள இடுகாட்டினை அகற்ற முடியுமா? இந்த பகுதியை இடிக்க வரும் இயந்திரத்திற்கும், கொண்டு வருபவர்களுக்கும் ஆபத்து. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தவறு செய்து கொண்டு வருகிறீர்கள். சுடுகாட்டின் மீது கை வைத்தால் உங்கள் அதிகாரம் சுடுகாட்டிற்கு செல்லும். கட்சிபாகுபாடின்றி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன்.

எடப்பாடி பழனிசாமி திராவிட இயக்கத்துக்கு கேடு விளைவிக்கிறார். ஆதி திராவிட குடியிருப்பு என சொல்கிறார்கள். இதே இடத்தில் அமைச்சர்கள் இருப்பார்களா?இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment