18 வயதுக்கு குறைவானோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோட்டார் வாகனச்சட்டப்படி, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எந்த ஒரு நபரும் வாகனம் ஓட்டக்கூடாது. மேலும், 18 வயதிற்கு குறைவான நபர்கள் பொது இடங்களில் வாகனங்கள் ஓட்டக்கூடாது. போக்குவரத்து விதிகளை மீறி பலர் வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் பெற்றோர்களின் வாகனங்களை ஓட்டுவதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால், ஓட்டுநர் உரிமம் இல்லாத, 18 வயதிற்கு குறைவான சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

