சென்னையில் 27 பஸ் நிலையங்களில் முதியவர்கள் இலவச பஸ் பாஸ் பெற ஏற்பாடு

314 0

சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கான பயண அட்டை 27 பஸ் நிலையங்களிலும், 15 பணி மனைகளில் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் வசிக்கும் மூத்த குடிமக்கள் மாநகர பஸ்களில் பயணம் செய்ய இலவச பயண அட்டை மற்றும் டோக்கன்கள் புதிதாக பெறுபவர்களுக்கு மட்டும் அந்தந்த பணிமனைகளில் அனைத்து நாட்களிலும் வழங்கப்படுகிறது.

புதிதாக பெறுபவர்கள், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள் அவர்களும் ரே‌ஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் ஒன்று கொண்டு வர வேண்டும்.

ஒவ்வொரு காலாண்டிற்கும் முந்தைய காலாண்டின் கடைசி மாதத்தில் 21-ந் தேதி முதல் அடுத்த மாதம் 30-ந் தேதி வரை மொத்தம் 40 நாட்கள் 3 மாதத்திற்கான இலவச பஸ் பயண அட்டை மற்றும் டோக்கன்களை மொத்தமாக பெற்றுக் கொள்ளலாம். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு நாளை (21-ந்தேதி) முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

பயண அட்டை 27 பஸ் நிலையங்களிலும், 15 பணி மனைகளிலும் காலை 8.30 மணி முதல் 1.30 மணி வரையிலும் 2 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் முதியவர்கள் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிராட்வே, சென்ட்ரல் ரெயில் நிலையம், கிண்டி எஸ்டேட், கே.கே.நகர், மந்தைவெளி, வேளச்சேரி, சைதாப்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், தி.நகர், திருவான்மியூர், வடபழனி, அய்யப்பன்தாங்கல், வில்லிவாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர் மேற்கு.

கோயம்பேடு, அயனாவரம், சுங்கச்சாவடி, அம்பத்தூர் ஓ.டி., பெரம்பூர், செங்குன்றம், எம்.கே.பி.நகர், ஆவடி, பூந்தமல்லி, வள்ளலார் நகர், திருவொற்றியூர் ஆகிய பஸ்நிலையங்களில் வழங்கப்படும்.

அடையார், வியாசர் பாடி, மாதவரம், செம்மஞ்சேரி, ஆலந்தூர், சைதாப்பேட்டை, ஆதம்பாக்கம், குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியம், தண்டையார்பேட்டை, பேசின்பாலம், மத்திய பணிமனை, எண்ணூர், பாடியநல்லூர், பெசன்ட்நகர் ஆகிய பணிமனைகளிலும் பஸ் பாஸ் வழங்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Leave a comment