பிரித்தானியாவில் அடைக்கலம் கோரிய மனு நிராகரிப்பு

288 2

ukபிரித்தானியாவில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் தமது விண்ணங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

2005ஆம் ஆண்டு ஜனவரியில் பிரித்தானியாவுக்கு மாணவர் வீசாவில் வந்த 28 வயதான குறித்த இளைஞர், 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்டில் இருந்து வெளியேறவேண்டும் என்ற வகையில் வீசா வழங்கப்பட்டது.எனினும் அவர் தமது வீசா காலத்தை நீடிக்க முயன்றபோது அது நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் 2009ஆம் ஆண்டு தாம் விடுதலைப்புலிகளின் உறுப்பினர் எனவும், தாம் நாட்டுக்கு திரும்பிசென்றால் சித்திரவதை செய்யப்படும் ஆபத்து இருப்பதாகவும் கூறி அடைக்கல கோரிக்கையை முன்வைத்தார். எனினும், அந்தக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் நியதிகளுக்கு அமைய தமது அடைக்கல கோரிக்கை மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

There are 2 comments

Leave a comment

Your email address will not be published.