தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் – அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்

7 0

டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகிவிட்டதாக நாஞ்சில் சம்பத் அறிவித்துள்ளார். அரசியலில் இருந்து விலகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

சிறந்த  பேச்சாளரும் எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தபோது அவருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியை வழங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டபோது சசிகலா அணியில் நாஞ்சில் சம்பத் பணியாற்றி வந்தார்.

சசிகலா தலைமையிலான அ.தி.மு.க. அம்மா அணியை டிடிவி தினகரன் வழிநடத்தியபோது அவருக்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பொது மேடைகளிலும், விவாத நிகழ்ச்சிகளிலும் வலுவாக குரல் கொடுத்து வந்தார்.

தற்போது டிடிவி தினகரன் புதிதாக அரசியல் அமைப்பை தொடங்கி உள்ள நிலையில் நாஞ்சில் சம்பத் திடீரென தினகரன் அணியில் இருந்து விலகி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அண்ணா, திராவிடம் என்பதை தவிர்த்து விட்டு என்னால் பேச முடியாது. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம்  என டிடிவி தினகரன் நம்புகிறார். அவரது நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால், அதில் நான் இல்லை. இனிமேல் நான் எந்த அரசியலிலும் நான் இல்லை.

டிடிவி தினகரனின் அநியாயத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதற்காக அவருக்கு எதிர்வினையாற்ற மாட்டேன். அரசியல் தமிழில் இனி அடைபட்டுக் கிடக்க மாட்டேன்.  இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்” என்றார்.

Related Post

வந்தே மாதரம் பாட வேண்டும் என்ற உத்தரவை திருத்தி அமைக்க வேண்டும் – முத்தரசன் 

Posted by - July 28, 2017 0
வந்தே மாதரம் பாடலை கட்டாயம் பாட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை திருத்தி அமைத்து வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…

ஜெயலலிதா மரணம்: 2 பெட்டிகளில் கொண்டு வந்து ஆவணங்களை தாக்கல் செய்தது அப்பல்லோ நிர்வாகம்

Posted by - January 12, 2018 0
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று இரண்டு பெட்டிகள் நிறைய ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. 

வழக்குகளை விரைவாக தீர்த்து வைக்க வேண்டும்: ரவிசங்கர் பிரசாத்

Posted by - September 17, 2017 0
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்த்து வைக்க வேண்டும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் அறிவுறுத்தி உள்ளார்.

ஆளுநர் அருகில் நிர்மலாதேவியை அனுமதித்தது யார்?- பேராசிரியர் முருகனின் மனைவி ஆவேசம்

Posted by - April 28, 2018 0
கவர்னருடன் நிர்மலா தேவி புகைப்படம் எடுக்க அனுமதித்தவரை பிடித்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும் என்று பேராசிரியர் முருகனின் மனைவி சுஜா கூறினார். 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை இயக்குனர் அறிவுரை

Posted by - February 15, 2018 0
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனங்களில் ஈடுபடவேண்டாம் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி அறிவுரை வழங்கி உள்ளார்.

Leave a comment

Your email address will not be published.