ஐ.நா.வில் பிரேரணை கெண்டுவந்த நாடுகள் தமிழ் மக்களுக்கு தொடர்ந்து ஒத்தாசை வழங்க வேண்டும்!

14 0

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு இலங்கை தொடர்பான பிரேரணையை கொண்டுவந்த அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும் என வடமாகாண முதலமைச்சர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாண தமிழ் மக்களுடைய பிரதிநிதியாக இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கருதகிறீர்கள்? என கேள்வி எழுப்பியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

போர்குற்றங்கள் செய்தவர்களை தண்டிப்பதாக இலங்கை அரசாங்கம் பசாங்கு செய்தாலும் உண்மையில் அவர்களை தண்டிக்காது. மாறாக அவர்களை மன்னிக்கும். இதற்கு சிறந்த உதாரணம் காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? என கேள்வி எழுப்பப்பட்டபோது காணாமல்போனவர்கள் இறந்திருக்கலாம் எனவும் இறந்துவிட்டார்கள் எனவும் பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் இப்போது காணாமல்போனவர்களை கண்டறிவதற்காக அலுவலகம் ஒன்றை உருவாக்குகிறார்கள்.

ஆகவே ஒரு மக்கள் கூட்டத்திற்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டிக்கவேண்டியது ஒரு அரசாங்கத்தின் கடமையாகும். அதனை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் செய்யாது. அவர்கள் குற்றவாளிகளுக்காக பரிந்து பேசுவார்கள். அதுபோல் உள்நாட்டு விசாரணை என்பதும் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான விசாரணையாக இருக்குமே தவிர குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கான விசாரணையாக ஒருபோதும் அமையாது.

எனவே நான் 2015 ஆம் ஆண்டும் 2017 ஆம் ஆண்டும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும்படி.

அதேபோல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்தபோதும் அதனையே கூறினேன். மேலும் இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு கொண்டுவந்தது. அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணையை கொண்டுவந்ததாக பாசாங்கு செய்தாலும், உண்மையில் அவர்கள் பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே அந்த பிரேரணையை கொண்டுவந்தார்கள்.

அதாவது இலங்கைக்குள் சீனாவின் தலையீடு அதிகரித்தது போன்ற பல்வேறு பூகோள நிலமைகளை கருத்தில் கொண்டே பிரேணை கொண்டுவந்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணை கொண்டுவந்தோம் என பாசாங்கு செய்தாலும் அவர்களுக்கு பொறுப்புள்ளது.

ஆகவே இலங்கை தொடர்பாக சரியான தீர்மானம் எடுப்பதற்கும் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட பிரேரணையை கொண்டுவந்த நாடுகள் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும்.

அதேபோல் மக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்துவதன் ஊடாக அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்றார்.

Related Post

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி; முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு அணிகள் வெளியேறின!

Posted by - April 27, 2017 0
அக்கினிச் சிறகுகள் என்ற பெயரிலான அமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியிலிருந்து முன்னணி அணிகள் வெளியேறி தமது எதிர்ப்பினை வெளியிட்டிருக்கின்றன.

எழிலன் உள்ளிட்ட 12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு இன்று

Posted by - November 9, 2017 0
இறுதிப்போரின் போது வெள்ளைக்கொடியுடன்  சரணடைந்து காணாமல் போக செய்யப்பட்ட திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளர்  எழிலன் உள்ளிட்ட  12 பேரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வழக்கு இன்று(9)…

உடனே இவனைச் சுட்டுக் கொல்லுங்கள்-கருணா

Posted by - October 20, 2016 0
இறுதி யுத்தத்தில் சிறீலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை உடனடியாகச் சுட்டுக்கொல்லுமாறும் இல்லாவிட்டால் இவனே நாளைக்கு தலைவராக வருகை தந்து உங்களுடன் மூர்க்கமாகப்…

இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தின் அதிரடி தீர்மானங்கள் – சற்றே பதற்றநிலை

Posted by - July 26, 2017 0
 இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு இரண்டரை வருடங்களில் மிக கடுமையான நடவடிக்கைகளில் தற்போது இறங்கியுள்ளது. அதாவது தொழிற்சங்கம் ஒன்றின் கோரிக்கைக்கு செவிசாய்க்காது இராணுவத்தினைக் கொண்டு அவர்களின் பணிகளை…

உள்நாட்டு இறைவரித் சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் – நிதி அமைச்சர்

Posted by - July 20, 2017 0
உள்நாட்டு இறைவரித் சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலத்தின் ஊடாக இலங்கையில் வினைத்திறனாக வரிஅறவீட்டு நிர்வாகத்தை உருவாக்க…

Leave a comment

Your email address will not be published.