ஜெனிவா பிரேரணைகள் பாதிக்கப்பட்டோரின் நலன் கருத்திக் கொண்டுவரப்படவில்லை – கஜேந்திரகுமார்(காணொளி)

13 0

ஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பில் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த பிரேரணைகள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

நேற்று ஜெனிவாவில் நடைபெற்ற உப குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்….,

‘இலங்கை பிரச்சினைக்கு ஒரு சர்வதேச பரிமாணம் இருக்கின்றது. அதில் சர்வதேச தரப்பு வகிக்க வேண்டிய முக்கிய வகிபாகம் ஒன்றிருக்கிறது.

உலகில் எங்கு இவ்வாறு நடந்தாலும் சர்வதேசம் அதில் தலையிட வேண்டும். அந்த விடயத்தில் இலங்கை விதிவிலக்கல்ல. இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆனால் அந்த பிரேரணைகளும் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த பிரேரணைகள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன.

அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அப்படியே மறைக்கப்பட்டு விட்டது. இன்று அந்த நிலைதான் காணப்படுகின்றது. உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் எந்தவொரு இராணுவ வீரரும் சட்டத்தின் முன்கொண்டு வரப்படமாட்டார்கள் என கூறுகின்றனர். அதன்போது மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகளை கொண்டு வந்த நாடுகள் ஜனாதிபதியையும் பிரதமரையும் பாராட்டுகின்றன. கடந்த மூன்று வருடங்களாக பிரேரணையை கொண்டு வந்த நாடுகள் இலங்கையுடன் சிறந்த உறவில் இருக்கின்றன.” என அவர் தெரிவித்தார்.

 

Related Post

அலுவலக வளாகத்தில் போதைப்பொருட்களை பயன்படுத்த வடக்கு ஆளுநர் தடை

Posted by - January 29, 2019 0
தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலுவலக வளாகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது மதுபாவனை அல்லது…

யாழில் மாற்றுத்திறனாளிகள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள விசேட நடவடிக்கை-ரவிகரன் (காணொளி)

Posted by - November 25, 2016 0
மாற்றுத்திறனாளிகளுக்கு யாழ்ப்பாணத்தில் வாகன சாரதி அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்குரிய விசேட நடமாடும் சேவை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நேற்றைய வடக்கு மாகாணசபையின் மாலை அமர்வின் போது…

சுவிஸ்ட்சர்லாந்து செல்கிறார் ரணில்

Posted by - January 15, 2017 0
சுவிஸ்ட்சர்லாந்தின் டவேஸ் நகரில் இடம்பெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் பங்குகொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார். பிரதமர் எதிர்வரும் 21ஆம்…

யாழில் சிக்கிய போலி குடிநீர் போத்தல்கள் ; உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - January 28, 2019 0
யாழ்ப்பாணக் குடாநாட்டில் போலியான பட்டியல் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த 6 ஆயிரத்து 800 போத்தல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம்…

கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு திகதிக்கு மாற்றம்

Posted by - January 18, 2017 0
மட்டக்களப்பில் எதிர்வரும் 21 ம் திகதி நடைபெற இருக்கின்ற கிழக்கு எழுக தமிழ் பிற்போடப்பட்டு உதிர்வரும் 28 ம் திகதி கல்லடி நாவற்குடா விவேகானந்த விளையாட்டு மைதானத்தில்…

Leave a comment

Your email address will not be published.