காலஞ்சென்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டிபன் காக்கிங்கிற்கு, வவுனியாவில் அஞ்சலி (காணொளி)

119013 0

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டிபன் காக்கிங்கிற்கு, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் மற்றும் வளாகத்தின் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில், வளாக முதல்வர் ரி.மங்களேஸ்வரன் தலைமையில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.

விஞ்ஞானி ஸ்டிபன் காக்கிங்கின் உருவப்படத்திற்கு வளாக முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்களால் விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.