ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரையான வீதி மூடல்

209 0
நில அளவைத் திணைக்கள ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தி முதல் புறக்கோட்டை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நில அளவைத் திணைக்களத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்குவதை எதிர்த்து இன்று (16) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் காரணமாக கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a comment