அமெரிக்கா கொன்ற மக்களுக்கு அஞ்சலி செலுத்துபவர் தனது இனத்தால் கொல்லபட்டவர்களுக்கு என்ன செய்தார்?

16 0

”நல்லாட்சி” எனக்கூறப்படும் ஆட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமுறை பயணமாக ஜப்பானுக்கு தன் துணைவியாருடன் சென்றுள்ளார்.

இன்று(15) ஹிரோசிமா நகருக்கு விஜயம் செய்துள்ளார். இது ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் . இது ஹோன்ஷூ தீவில் உள்ளது. இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது ஆகஸ்ட் 6ஆம் திகதி அமெரிக்காவினால் முதலாவது அணுகுண்டு வீசப்பட்டது.

இத்தாக்குதல் காரணமாக இந்த நகரம் 90 வீதம் அழிவுக்குட்பட்டதுடன், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரேநேரத்தில் உயிரிழந்தனர்.

அவ்வருட நிறைவில் மரணித்தவர்களின் எண்ணக்கை 1,40,000 ஆக அதிகரித்தது. இந்த கோரம் இடம்பெற்ற இடத்தை சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பார்வையிட்டதுடன் ஹிரோசிமா நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

ஜப்பான் சென்ற வேளை இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஈழ யுத்தத்தில் குறிப்பாக முள்ளிவாய்காலில் கொல்லப்பட்ட 1, 50, 000 மக்களுக்கு அஞ்சலி வெலுத்தினாரா?அல்லது வருத்தம் தெரிவித்தாரா?

மகிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியில் இருந்து மக்களை விடுவிப்பதாக கூறி , தமிழ் மக்களின் வாக்குவங்கியால் ஜனாதிபதியான மைத்ரிபால சிறிசேன நல்லாட்சி என்ற போர்வையில் தமிழ் மக்களிற்கு என்ன செய்தார்? என்ன செய்யப்போகிறார்?

உலகத்திற்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்த நீலச்சட்டை மைத்திரி . 2009ஆம் ஆண்டு போர் உச்சத்தில் இருந்த வேளை ஐந்து தடவைகள் சிறிலங்காவின் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். போரின் இறுதி நாட்களிலும் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி நாட்டில் இல்லாத நிலையில், இவரே பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகிற்கு “நல்லாட்சி“ என்ற காணல் நீரை காட்டும் மைத்திரி ஆட்சி தமிழ் மக்களின் கனவுகளை காணமல் போக செய்யும் பணியை சத்தம் இன்றி , ரத்தம் இன்றி முடித்துக்கொண்டிருக்கிறது.

யப்பானுக்கு சென்ற போது நூற்றாண்டுகளுக்கு முன் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் மைத்திரியால் வன்னிக்கு பல தடவை சென்ற போதும் தான் பாதுகாப்பு அமைச்சராக இருந்த வேளையும் , தனது இனத்தவரால் கோரமாக கொல்லப்பட்ட மக்களுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்த முடியாமல் போனது ஏன்?

இன்னும் இன வாதம் இம்மியும் குறையாதது தான்.

Related Post

தேர்தலில் ஈழத்தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்ன?

Posted by - February 9, 2018 0
தாயக்கனவுடன் சிறகு விரிந்து வான் உயரப்பறந்த தமிழ் இனம். துரோக வலையில் சிக்குண்டு வேட்டைக்காரனின் அம்பு பட்டு துடிதுடித்து மண்ணில் வீழ்ந்தது.

பினிஸ் பறவைகளாய் எழுவோம்!

Posted by - May 30, 2018 0
“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் புகட்டுகின்றன. அந்த புத்தகங்களை…

கிராமங்களில் இருந்து அரசை நோக்கி…!

Posted by - September 19, 2018 0
தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை மக்களின் அடிப்படை உரிமை ஆகும். அந்த வகையில் தகவல் அறியும் உரிமைக்கான சர்வதேச தினம் செப்ரம்பர் மாதம் 28 ஆம் திகதி…

Leave a comment

Your email address will not be published.