அர்ஜுன் மஹேந்திரனுக்கு பிடியாணை

4993 37

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாகவே பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment