இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்வது சாத்தியமற்றது -சுமந்­திரன்

243 0

இலங்­கையை சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு கொண்டு செல்­ல­ மு­டி­யாது. இவ்­வாறு நான் கூறினால்  இலங்­கையை பாது­காக்­கிறார் என ஊட­கங்கள் கூறு­கின்­றன எனத் தெரி­வித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இத்­த­கைய தீர்­மா­னத்தை கொண்டு நடத்­துக்­கின்ற அமெ­ரிக்­காவே இதனை செய்­யாத போது எமது உத்­தி­யோ­க­பூர்வ நிலைப்­பாட்டை தெரி­விப்­ப­தற்­கா­கவே புதிய சுதந்­திரன் என்ற பத்­தி­ரிகை வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்தார்.

இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் ”புதிய சுதந்­திரன்” பத்­தி­ரிகை வெளி­யீடு நேற்று நல்லூர் இளங்­க­லைஞர் மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி கட்­சி­யி­னு­டைய பேச்­சாளர் என்ற அடிப்­ப­டையில் இந்த உத்­தி­யோ­க­பூர்வ வெளி­யீ­டான புதிய சுதந்­திரன் பத்­தி­ரி­கையின் வெளி­யீடு காலத்தின் தேவை­யாகும். இதன் தேவையை மற்­றைய ஊட­கங்கள் கடந்த காலங்­களில் எங்­க­ளுக்கு உணர்த்­தி­யுள்­ளது. சுதந்­திரன் பத்­தி­ரி­கையின் காலத்தில் எப்­ப­டி­யாக கட்­சியின் நிலைப்­பாடு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. அதனை மீளவும் வெளி­யி­டு­வ­தற்­கான தேவை­யா­க­வுள்­ளது என பலர் கூறி­யுள்­ளார்கள்.

கட்­சி­யி­னு­டைய உத்­தி­யோ­க­பூர்­வ­மான நிலைப்­பாடு என்ன என்­பதை பல வரு­டங்­க­ளாக அறி­விக்கத் தவ­றி­யி­ருக்­கின்றோம். 1983 ஆம் ஆண்டு சுதந்­திரன் பத்­தி­ரிகை முடக்­கப்­பட்ட பின்னர்  கட்­சி­யி­டைய உத்­தி­யோ­க­பூர்வ நிலைப்­பாடு என்ன என்­பதை அறி­விப்­பதில் இத்­தனை காலம் பின்­னிற்­கின்றோம். நீண்ட இடை­வெ­ளியின் பின்னர் வெளி­யி­டப்­படும்  பத்­தி­ரி­கை­யாக உள்­ளது.

இப்­பத்­தி­ரிகை இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் உத்­தி­யோ­க­பூர்வ வெளி­யீ­டா­கத்தான் வெளி­வரும். உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு என்­ன­வென்று தவ­றிய கார­ணத்­தினால் தான் பல­வி­த­மான குழப்­பங்கள் மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளது.

இப்­பத்­தி­ரி­கையின் முத­லா­வது வெளி­யீட்­டி­லேயே சில முக்­கிய விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தற்­போது ஜெனிவா கூட்­டத்­தொடர் நடை­பெற்று வரு­கின்­றது. இக்­கூட்டத் தொடர் ஆரம்­பிப்­ப­தற்கு முன்­ன­தாக பிரித்­தா­னியா ஒழுங்­கு­ப­டுத்­திய உறுப் புநா­டு­க­ளுக்­கான கூட்­டத்தில் 26 நாடுகள் பங்கு பற்­றி­யுள்­ளன. இதில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் உத்­தி­யோ­க­பூர்வ நிலைப்­பாடு என்ன என்­பதை கேட்டு அறிந்­துள்­ளார்கள். எத்­த­கைய அழுத்­தங்கள் கொடுக்­கப்­பட வேண்டும் என நாங்கள் உத்­தி­யோ­க­பூர்­வ­மாகக் கூறி­யுள்ளோம்.

தற்­போது கூட்­டத்­தொடர் நடை­பெற்­று­வரும் நிலையில் பக்க நிகழ்­வுகள் நடை­பெற்று வரு­கின்­றது. இம்­முறை இலங்கை தொடர்­பாக 32 நிகழ்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளது. இவற்றை யார் நடத்­து­கி­றார்கள் ஏன் நடத்­து­கி­றார்கள் என்ற தெளி­வில்லை. உறுப்பு நாடு­களும் தமிழ் மக்கள் தொடர் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிடம் உத்­தி­யோ­க­பூர்வ நிலைப்­பாடு என்ன என்­ப­தைத்தான் கேட்­கின்­றார்கள்.

சிலர் ஜெனிவா சென்று தீர்­மா­னங்­களை எதிர்க்­கி­றார்கள். நாங்கள் தீர்­மானம் வேண்டும் என்­கின்றோம்.  ஐக்­கிய நாடுகள் சபையில் எவற்றைச் செய்­ய­மு­டியும்? அங்கு சென்றால் எல்லாம் கிடைத்து விடும் என்று எமது மக்­க­ளுக்கு ஊக்­கு­வித்­துள்­ளார்கள். ஜெனி­வாவில் அர­சாங்­கத்­தினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் 36 விட­யங்கள் இருக்­கின்­றன. இதில் மூன்று விட­யங்கள் பொறுப்­புக்­கூறல் சம்­பந்­த­மா­னது. இறு­தி­யாக போர்க்­குற்றம் சம்­பந்­தப்­பட்­டது. ஏனைய 33  விட­யங்­களும் மிக முக்­கி­ய­மா­னவை. குறிப்­பாக காணி விடு­விப்பு அர­சி­யல்­கை­திகள் விடு­தலை, பெண் தலை­மைத்­துவ குடும்­பங்­களின் வாழ்­வா­தாரம், நஷ்­ட­ஈடு, அர­சியல் தீர்வு தொடர்­பா­னவை. இவ்­வா­றான பல­வற்றை அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

தற்­போது நடை­பெற்­று­வரும் பிர­சாரம் என்­ன­வெனில் இந்தத் தீர்­மா­னத்­தினால் பய­னில்லை. இதைக் கைவிட்­டு­விட்டு அர­சாங்­கத்தை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்த வேண்டும். இத­னைத்தான் தற்­போது கூறி­வ­ரு­கி­றார்கள். இது மக்­க­ளுக்குத் தேவை­யா­னதா யாரா­வது பகி­ரங்க வெளியில் அர­சாங்­கத்தை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்த முடியும் என கூற­மு­டி­யுமா இது எவ­ராலும் முடி­யாது.

இந்த உண்மை எல்­லோ­ருக்கும் தெரியும். பாது­காப்பு சபை இந்த விட­யத்தை குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்­தாது. இந்த விட­யத்தை முன்­னின்று நடத்­து­கின்ற அமெ­ரிக்­காவே இதனைச் செய்­யாது.

அமெ­ரிக்­காவே இந்த நீதி­மன்­றத்தை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. 2012 ஆம் ஆண்டு தொடக்கம் இத்­த­கைய தீர்­மா­னத்தை கொண்டு நடத்­துக்­கின்ற அமெ­ரிக்­காவே இதனை செய்­யாத போது இதனைத் தெரிந்து கொண்டு மக்­க­ளுக்கு பெய்­யான பரப்­பு­ரை­களைச் செய்து இதைச் செய்வோம் என்று பரப்­புரை நடத்­து­கின்­றது. இதற்கு மாற்­றுப்­பி­ர­சாரம் கிடை­யாது. இதை நான் சொன்னால் சுமந்­திரன் சொல்­கின்றார் சர்­வ­தேச நீதி­மன்­றத்­திற்கு செல்­ல­மு­டி­யாது. இலங்­கையை அவ்­வாறு அனுப்­ப­மு­டி­யாது. இலங்­கையை பாது­காக்­கிறார் என ஊட­கங்கள் கூறும். அவ்­வாறு ஊட­கங்கள் கூறும்­போது எங்­க­ளு­டைய உத்­தி­யோ­க­பூர்­வ­மான காரணம் என்ன என்­பதை எங்­க­ளு­டைய பத்­தி­ரி­கை­களில் வெளி­யி­டு­வ­தற்­கா­கத்தான் புதிய சுதந்­திரன் வெளி­யீடு செய்­கின்றோம்.

நாங்கள் பொறுப்­பான பய­ணத்­திலே எதைச் செய்­ய­மு­டியும் எதற்கு ஆத­ரவைத் திரட்­டி­யி­ருக்­கின்றோம், எத்­த­கைய ஆத­ரவை சர்­வ­தே­சத்தில் தக்­க­வைக்­க­மு­டியும் என்ற போக்­கிலே தான் நாங்கள் பயணிக்க முடியும். இருக்கிற ஒரே ஆதரவையும் நாங்கள் புறம்தள்ளிவிட்டு வெற்றிபெற்று விடலாம் என்று வீரப்பேச்சு பேசுவது மக்களை வெகுவாகப் பாதிக்கும். மக்களுக்கு உண்மை தெரியும் தானே என இவ்வளவு காலமும் நாங்கள் நினைத்தோம். ஆனால் அப்படி இல்லை என்பது தேர்தல் முடிவில் வெளிவந்துள்ளது.

எங்களுடைய கட்சி எதைச் செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்ற நிலைப்பாட்டை அறிவிப்பது அத்தியாவசிய தேவையாகவுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்பினால் அதற்கான இணையத்தளம் இருக்கின்றது. அதற்கான பத்திரிகை இருக்கின்றது. இதன்மூலம்   உத்தியோகபூர்வமாக வெளிவரும் என்றார்.

Leave a comment