வடமாகாணத்தில் கால்நடை அபிவிருத்தி திட்டம்

257 0

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு கால்நடை அபிவிருத்தி திட்டமொன்றை வடமாகாணத்தில் முன்னெடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவை அமைச்சராக கொண்ட இந்த அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் இடம் பெயர்ந்தவர்கள் மீள்குடியமர்த்தப்பட்ட குடும்பங்கள் குடும்ப தலைவிகளை கொண்ட குடும்பங்கள் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டோர் ஆகியோர் நன்மையடையவுள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் தோலகட்டியிலுள்ள நெல்லிப்பானம் தயாரிக்கும் நிலையத்திற்கு 3.5 மில்லியன் பெறுமிதியாக உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையத்தின் தயாரிப்பு தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். கிறிஸ்தவ அமைப்பினால் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் மூலம் பெரும் எண்ணிக்கையிலானோர் நன்மையடைவார்கள் என்று தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானஜோதி தெரிவித்தார்.

சங்காணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாதணிகளை தயாரிக்கும் நிலையத்திற்கும் இயந்திர உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இங்கு தயாரிக்கப்படும் பாதணிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான தொழிநுட்ப உதவியையும் அமைச்சு வழங்கியுள்ளது.

மருதங்கெனி பிரதேச செயலாளர் பிரிவில் குடத்தனை உணவு உற்பத்தி கிராமத்துக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாகர் கோவில் உள்ள பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டடம் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அமைச்சினால் புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்கு 2.3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றும் தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அமைச்சு செயலாளர் வி.சிவஞானஜோதி மேலும் தெரிவித்தார்

Leave a comment