மர்மமாக உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்பு

928 17

புளியங்குளம், ஊஞ்சல் கட்டு பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புளியங்குளம் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

ஊஞ்சல் கட்டு, நெடுங்கேனி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்திற்கு அருகில் இருந்து உள்ளூர் துப்பாக்கி இரண்டும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment