தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது சுவிஸ் நாட்டை வந்தடைந்தது.

732 10

தமிழினப்படுகொலைக்கு நீதிகோரி ஐநா நோக்கிய ஈருருளிப்பயணமானது (08.03.2018) ஒன்பதாவது நாளான இன்று சுவிஸ் பாசெல் நகரை வந்தடைந்தது. கடுங்களிரையும் பனிப்பொழிவையும் தாண்டி உறுதி தளராமல் வந்தவர்களில் இருவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .சுவிஸ் நாட்டு எல்லையில் கடந்த காலங்களைவிட அதிகளவான மக்கள் கூடிநின்று அவர்களை வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து மக்கள் சந்திப்பு இடம்பெற்றது. பின்னர் இன்றைய பயணமானது Voltaplatz இல் நிறைவடைந்தது . நாளை காலை 10.00 மணிக்கு Voltaplatz ல் தொடங்கி பாசெல் நகரமத்தியினூடாக சென்று பாசெல்லான்ட் சொலத்தூண் ஊடாக 12.03.2018 திங்கட்கிழமை ஜெனீவாவை சென்றடையும். அனைத்து உறவுகளையும் ஜெனீவா முருகதாசன் திடலிலே திங்கட்கிழமை 14.00 மணிக்கு ஒன்றுகூடுமாறு அன்புடன் அழைக்கின்றது

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு.

Leave a comment