அணு ஆயுதங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்த உலக நிறுவனங்கள்

340 0

உலகின் பல முன்னணி வங்கிகள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 525 பில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் சில அணு ஆயத சோதனைகள் காரணமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும், அணு ஆயுதங்களை தயாரிப்பதிலும், அதை சோதனை செய்வதிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், உலகின் முன்னணி வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும் அணு ஆயுத நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடி செய்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு (ICAN) சமீபத்தில் வெளியிட்ட தகவலின் படி 24 நாடுகளை சேர்ந்த சுமார் 329 வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் இந்தியா, பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள 20 வெவ்வேறு அணு ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் மூதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அதிலும் கடந்த 2014-ம் ஆண்டிற்கு பின்னர் சுமார் 525 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இந்நிறுவனங்கள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 3 நிறுவனங்கள் மட்டும் சுமார் 110 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்துள்ளன எனபது குறிப்பிடத்தக்கது.

 

Leave a comment