கண்டிக்கும் அம்பாறைக்கும் தேவையான அவசர கால நிலமை வடக்கிற்கு எதற்கு ?

335 0

கண்டிக்கும் அம்பாறைக்கும் தேவையான அவசர கால நிலமையை எதற்காக வடக்கையும் உள்ளடக்கி பிரகடனப்படுத்தபட்டுள்ளதென கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எவ் கட்சி தலைவருமான சுரேஸ்பிறேமச்சந்திரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 10 நாட்களுக்கு அவசரகால நிலமையை பிரகடனம் செய்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டு அச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அவசர கால சட்டத்தின் கீழ் எமது தமிழ் இளைஞர்,யுவதிகள் எதிர்கொண்ட துன்பங்கள் சொல்லித்தெரியவேண்டியதொன்றல்ல.

கண்டிக்கும் அம்பாறைக்கும் தேவையான அவசர கால சட்டம் எதற்காக வடக்கையும் உள்ளடக்கி பிரகடனப்படுத்தபட்டுள்ளதென்பது சந்தேகத்துடன் பார்க்கப்படவேண்டியுள்ளது.ஏற்கனவே இச்சட்டத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படவேண்டுமாவென்பதை இப்பொழுதும் அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஏதிர்கட்சி தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்தும் அரசிற்கு ஒத்தூதிக்கொண்டிருப்பதை விடுத்து மீண்டும் எமது மக்களை பாதிக்கப்போகின்ற இச்சட்டம் தொடர்பில் குரல் எழுப்பவேண்டுமெனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே அவசர கால சட்டத்தை நீடிக்க வேண்டுமாயின் நாடாளுமன்றத்தில் அதற்கான அனுமதியை பெற வேண்டும்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் நடைபெற்றுவந்த மோதல்களையடுத்து 30 ஆண்டு காலமாக நாட்டில் நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அரசினால் இரத்துச் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment