கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தம்

487 0

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதையடுத்து தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு – கர்நாடகா மாநிலங்கள் இடையே காவிரி பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்த தீர்ப்பை தமிழக விவசாயிகள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். மேலும், தீர்ப்பு வெளியான பின்னர், இரு மாநிலங்களிலும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் காவல் துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகா மாநிலத்துக்கு செல்லும் அனைத்து தமிழக அரசுப்பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. வேலூரில் இருந்து புறப்பட்டு ஓசூர் வழியாக கர்நாடகம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் வேலூரிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

மற்ற பேருந்துகள் ஓசூரில் நிறுத்தப்பட்டன. பேருந்துகள் பாதிவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Leave a comment