கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி

1 0

தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாமென, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் அனுமதியளித்துள்ளார்.

கேப்பாபுலவு பகுதியில் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த பகுதியிலிருந்து பகுதியளவிலான காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், தமது காணிகளை முழுமையாக விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த அம்மக்கள், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சுதந்திர தினத்தை துக்கதினமாக அனுஸ்டித்த மக்கள், விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்குச் செல்ல முற்பட்டவேளை, அம்மக்களை பொலிஸார் தடுத்தமையால் குழப்ப நிலை தோன்றியிருந்தது.

இதனையடுத்து, குழப்பத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட 5 பேருக்கு எதிராக பொலிஸார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கு மீதான விசாரணைகளையடுத்து, பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில், கேப்பாபுலவு மக்கள் தமது உரிமைக்காக போராடலாம் என தெரிவித்த நீதவான் போராட்டத்தை தொடர அனுமதியளித்தார்.

Related Post

காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்

Posted by - December 10, 2018 0
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது பிள்ளைகளை தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் படம் எடுத்து அச்சுறுத்தல்!

Posted by - May 18, 2018 0
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி நேற்று மதியம் 12 மணியளவில் வவுனியாவை வந்தடைந்தது.

தமிழ்த் தேசியப் பேரவையின் கூட்டத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல்!

Posted by - February 3, 2018 0
யாழ்ப்பாணம் றக்கா வீதி மருதடிப் பிரதேசத்தில் இன்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மீது குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள 5 கிராம சேவர் பிரிவில் 800 ஏக்கர் விடுவிக்க இணக்கம்

Posted by - August 21, 2016 0
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மேலும் 800 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட பகுதிகளில் 460 எக்கர் காணிகள் மட்டுமே…

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அதிகாரம் இல்லை – சங்கரி

Posted by - November 7, 2016 0
தமிழ் மக்கள் தொடர்பில் சர்வதேசத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அதிகாரம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணி தெரிவித்துள்ளது. அதன் பொது செயலாளர் வீ.…

Leave a comment

Your email address will not be published.