கூட்­ட­மைப்­பும், தமிழ்க் காங்­கி­ரஸும் இணைந்தாலே ஆட்சி

363 0

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யும் இணை­யா­மல் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளில் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை தேர்­தல் முடி­வு­கள் காட்டுகின்றன.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பூந­கரி பிர­தேச சபை­யி­லும், திரு­கோ­ண­ மலை மாவட்­டத்­தின் வெரு­கல் பிர­தேச சபை­யி­லும் மாத்­தி­ரமே தனித்து ஆட்சி அமைக்க முடி­யும். ஊர்­கா­வற்று­றைப் பிர­தேச சபை­யில் ஈ.பி.டி.பி. தனித்து ஆட்சி அமைக்க முடி­யும்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு 27 சபை­க­ளில் கூடிய ஆச­னங்­க­ளை­யும், அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் 2 சபை­க­ளில் கூடிய ஆச­னங்­க­ளை­யும், ஐக்கிய தேசி­யக் கட்சி 2 சபை­க­ளில் கூடிய ஆச­னங்­க­ளை­யும், சிறி­லங்கா பொது­ஜன பெர­முன ஒரு சபை­யில் கூடிய ஆச­னங்­க­ளை­யும் பெற்­றுள்­ளன.

இந்த 32 சபை­க­ளி­லும் கட்­சி­கள் கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்­டி­ருந்­தா­லும் ஆட்சி அமைப்­ப­தற்­கு­ரிய தனிப் பெரும்­பான்­மை­யைப் பெற்­றுக் கொள்­ள­வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a comment