நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 13 பிணைக்கைதிகள் விடுவிப்பு

1415 0

நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 13 பிணைக்கைதிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த 8 ஆண்டுகளாக போகோ ஹாரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல் நடத்தி இதுவரை 20 ஆயிரம் பேரை கொன்று குவித்துள்ளனர்.

இந்த நிலையில் வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த ஆண்டு பலரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர். அவர்களில் 13 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களில் 10 பேர் பெண்கள். 3 பேர் கல்லூரி பேராசிரியர்கள் ஆவர். போலீஸ் வாகன அணிவகுப்பு தாக்குதலின் போது அவர்கள் கடத்தப்பட்டனர்.

இவர்களை விடுதலை செய்ததில் செஞ்சிலுவை சங்கம் பெரும் பங்கு வகித்தது. அரசாங்கம் சார்பில் போகோ ஹாரம் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இத்தகவலை நைஜீரிய அதிபர் முகமது புகார் தெரிவித்தார்.

சிக்புக் நகரில் கடந்த 2014-ம் ஆண்டு கடத்தப்பட்ட 200 மாணவிகளில் 100 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 100 பேரை தேடும் பணியில் ராணுவம் தீவிரமாக உள்ளது என்றும் அவர் கூறினார். தீவிரவாதிகளால் விடுவிக்கப்பட்ட 13 பேரும் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் மைதுகுரிக்கு அழைத்து வரப்பட்டனர்.

Leave a comment