வடக்கு கிழக்கு இணைந்த மாகா­ணத்­துக்­குள் கூட்­டாட்­சிக் கட்­ட­மைப்­புக்­குள்ளே அதி­கா­ரப் பகிர்வு

303 0

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்கு கிழக்கு இணைப்­பைக் கைவிட்­டுள்­ளது. ஒற்­றை­யாட்­சிக் கட்­ட­மைப்­புக்கு இணங்கி விட்­டது என்று விமர்­ச­னங்­கள் முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலை­யில், வடக்கு கிழக்கு இணைந்த மாகா­ணத்­துக்­குள் கூட்­டாட்­சிக் (சமஷ்டி) கட்­ட­மைப்­புக்­குள்ளே அதி­கா­ரப் பகிர்வு ஏற்­பா­டு­கள் செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான தேர்­தல் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தேர்­தல் அறிக்கை வவு­னி­யா­வில் நேற்று வெளி­யி­டப்­பட்­டது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளான இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்­சித் தலை­வர்­க­ளின் கையெ­ழுத்­து­டன் தேர்­தல் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

தேர்­தல் அறிக்­கை­யில் அர­சி­யல் தீர்வு தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. தமிழ் மக்­கள் தனித்­து­வ­மிக்க தேசிய இனம், வடக்­குக் கிழக்கு மாகா­ணங்­கள் தமிழ் பேசும் மக்­க­ளது பூர்­வீக வாழ்­வி­டங்­கள், தமிழ் மக்­கள் ஒரு தனித்­து­வ­மான மக்­கள் என்ற அடிப்­ப­டை­யில் சுய­நிர்­ணய உரி­மைக்கு உரித்­து­டை­ய­வர், கூட்­டாட்சி (சமஷ்டி) கட்­ட­மைப்­புக்­குள்ளே ஒன்­று­பட்ட வடக்­குக் கிழக்கு அல­கைக் கொண்ட அதி­கா­ரப் பகிர்வு ஏற்­பா­டு­கள் தொடர்ந்து செயற்­ப­டுத்­தப்­பட வேண்­டும்.

தமிழ் பேசும் முஸ்­லிம் மக்­க­ளும் பகி­ரப்­ப­டும் அதி­கா­ரப் பகிர்வு ஏற்­பா­டு­க­ளின் மூலம் நன்­மை­க­ளைப் பெற உரித்­து­டை­ய­வர்.பகி­ரப்­பட்ட இறை­யாண்­மை­யின் அடிப்­ப­டை­யில் உரு­வாக்­கப்­ப­டும் அதி­கா­ரப் பகிர்­வா­னது நிலம், சட்­டம் ஒழுங்கு, சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தல், தமிழ் மக்­க­ளின் பாது­காப்பு, சமூக பொரு­ளா­தார அபி­வி­ருத்தி, வேலை­வாய்ப்பு, சுகா­தா­ரம், கல்வி, உயர்­கல்வி, தொழிற்­ப­யிற்சி, விவ­சா­யம், கைத்­தொ­ழில், கடற்­றொ­ழில், கால்­நடை அபி­வி­ருத்தி, மொழி, பண்­பாடு முத­லி­ய­வற்­றின் மீதும் உள்­நாட்­டி­லும், வெளி­நாட்­டி­லும் திரட்­டிக் கொள்­ளும் வளங்­கள் மற்­றும் நிதி அதி­கா­ரம் மீதான ஏனைய விட­யங்­கள் தொடர்­பா­ன­தா­க­வும் இருத்­தல் வேண்­டும் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

Leave a comment