வீரமரணம் அடைந்த வீரர் சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி

2 0

காஷ்மீரில் எதிரிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த எல்லை பாதுகாப்புப்படையின் தலைமைக் காவலர் சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

காஷ்மீரில் எதிரிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்த எல்லை பாதுகாப்புப்படையின் தலைமைக் காவலர் சுரேஷ் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆர்.எஸ் புரா பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பண்டாரசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமியின் மகனும், எல்லை பாதுகாப்பு படையின் 78-வது படைப்பிரிவின் தலைமைக் காவலருமான அ.சுரேஷ், 17-ந்தேதியன்று எதிரிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார்.

இந்த செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, உயிரிழந்த தலைமைக் காவலர் அ.சுரேஷ் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், அ.சுரேசின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Post

சட்டசபையை போர்க்களமாக மாற்றிவிட்டனர் – விஜயகாந்த்

Posted by - August 19, 2016 0
சட்டசபையை போர்க்களமாக மாற்றிவிட்டனர். தமிழகத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக புதிய ஆட்சி வரும் பொழுதுதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள…

‘நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் விபரீத முடிவு எடுக்கக்கூடாது

Posted by - August 25, 2017 0
நீட்’ தேர்வினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்கொலை என்ற கோழைத்தனமாக முடிவை எடுக்கக்கூடாது என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுரை கூறி உள்ளார்.

எடப்பாடியை நீக்குமாறு தினகரன் தரப்பினர் ஆளுநரிடம் கோரிக்கை

Posted by - August 22, 2017 0
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்குமாறு கோரி, ஆளுநர் வித்தியாசாகர் ராவ்விடம், தினகரன் ஆதரவு தப்பினர் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக்…

பாளையில் பாலத்தில் கார் மோதி 3 பேர் பலி

Posted by - September 6, 2016 0
பாளையில் புதுமாப்பிள்ளை கண்முன்னே பாலத்தில் கார் மோதி தந்தை-சகோதரர் பலியாகினர். விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி…

மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தோல்வி: மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - December 5, 2017 0
காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.