இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மந்திரிசபை மாற்றம் – இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு துணை மந்திரி பதவி

10 0

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது மந்திரிசபையை மாற்றி அமைத்து உள்ளார். அதில் இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு துணை மந்திரி பதவி கிடைத்து உள்ளது.2 பேரில் ஒருவர், ரிஷி சுனக். மற்றொருவர் சுயல்லா பெர்னாண்டஸ்.

37 வயதான ரிஷி சுனக் இங்கிலாந்தில் பிறந்தவர். ‘இன்போசிஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன். நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதாவை திருமணம் செய்து கொண்டு உள்ளார். இவர் ரிச்மாண்ட் தொகுதி எம்.பி. ஆவார். இவருக்கு வீட்டு வசதித்துறை, உள்ளாட்சித்துறை வழங்கப்பட்டு உள்ளது.

37 வயதான சுயல்லா பெர்னாண்டசும் இங்கிலாந்தில் பிறந்தவர்தான். கோவாவை பூர்வீகமாக கொண்ட பெண் தலைவரான இவர் பார்ஹாம் தொகுதி எம்.பி. ஆவார். இவருக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது தொடர்பான துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் இருவரும் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக நடந்த பொதுவாக்கெடுப்பின்போது, அதற்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்தவர்கள் ஆவார்கள்.

Related Post

தென் கொரியாவில் நாளை குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்கம் – வட கொரிய தலைவரின் தங்கை பங்கேற்பு

Posted by - February 8, 2018 0
தென் கொரியாவில் நாளை நடக்கிற தொடக்க விழாவில், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் தங்கை கிம் யோ ஜாங் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு: 7 சதவீத கூடுதல் ஆதரவுடன் ஹிலாரி முன்னணி

Posted by - August 31, 2016 0
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பில் 7 சதவீதம் கூடுதல் ஆதரவு பெற்று ஹிலாரி முன்னணியில் உள்ளார்.

அங்கோலா நாட்டில் கால்பந்து மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலி

Posted by - February 12, 2017 0
அங்கோலா நாட்டில் உள்ள கால்பந்து மைதானம் ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - October 17, 2016 0
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மொசூல் நகரை மீண்டும் கைப்பற்ற இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈராக்கின் பிரதமர் ஹெய்டர் அல் அபாபி இதனை தெரிவித்துள்ளார். இந்த…

Leave a comment

Your email address will not be published.