ஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையத்தில் பூங்குன்றன் ஆஜர்

210 0

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் பூங்குன்றன் ஆஜரானார். 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. தி.மு.க. மருத்துவ அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன், ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன், சகோதரர் தீபக் மற்றும் அரசு மருத்துவர்கள் என மொத்தம் நேற்று வரை 17 பேர் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆஜராகும்படி விசாரணை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இதனை ஏற்று பூங்குன்றன் இன்று ஆஜரானார்.

அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக ஜெயலலிதா எந்த வகையிலான சிகிச்சை மேற்கொண்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன? உடல்நலம் மோசமாகும் நிலைக்கு வருவதற்கு என்ன காரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டார். அதற்கு பூங்குன்றன் பதில் அளித்தார்.

விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஆஜர் ஆவாரா? வக்கீல்கள் மூலம் விளக்கம் அளிப்பாரா? என்பது இன்னும் முடிவாகவில்லை.

Leave a comment