பளை பகுதியில் சிவானந்தமூர்த்தி சுரேந்திரன் என்பவர் மீது இன்று இரவு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹலோரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் பணியாளரான இவர் மோட்டார் சைக்கிளில் யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த போது, இனந்தெரியாத நபர்கள் இவரைத் துரத்திச் சுட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் படுகாயமடைந்த சுரேந்திரன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

