சதொசவில் பியர், வைன் ரக மதுபானம் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்- அமைச்சர் ஜோன்

415 0

நாட்டிலுள்ள சதொச விற்பனை நிலையங்களில் கட்டாயம் பியர், வைன் சாராய வகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் அவற்றில் தவறு இல்லையெனவும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மதஅலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

இலங்கையின் முதலாவது மெகா சதொச நிலையம் இன்று(05) வெலிசரையில் திறந்துவைக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

ச.தோ.ச விற்பனை நிலையங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மானிய விலையிலேயே மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் விநியோகிக்கின்றன.

ஜனாதிபதியும்,பிரதமரும் நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கும் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

கடந்த சில காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் காரணமாகவே குறித்த பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜோன் மேலும் குறிப்பிட்டார்.

நாடு பூராகவும் 400வது சதொச கிளையாக இன்று திறந்துவைக்கப்படும் இந்த மெகா சதொச கிளை காணப்படுகின்றது. இந்த வகையில் நாடு முழுவதும் 40 மெகா சதொச கிளைகளை திறக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது

Leave a comment