காங்கேசன்துறையிலிருந்து சென்னைக்கு கப்பலில் பயணிக்கலாம்!

3232 0

சிதம்­ப­ரத்­தில் நடை­பெ­றும் திரு­வா­திரை உற்­ச­வத்­தில் பங்­கேற்­கும் பக்­தர்­க­ளுக்­காக, காங்­கே­சன்­து­றை­யில் இருந்து சென்­னைக்­குப் பய­ணி­கள் கப்­பல் சேவையை நடத்த இந்­திய மத்திய அரசு அனு­மதி அளித்­துள்ளது.

இது தொடர்­பாக இந்­திய அய­லு­ற­வுத்­துறை அமைச்சு நேற்­று­முன்­தி­னம் செய்­திக் குறிப்பை வெளி­யிட்­டுள்­ளது.

சிதம்­ப­ரம் நட­ரா­ஜர் ஆல­யத்­தில், நாளை தொடக்­கம், ஜன­வரி 3ஆம் திகதி வரை நடை­பெ­றும் மார்­கழி திரு­வா­திரை திரு­வி­ழா­வில் (ஆருத்­திரா தரி­ச­னம்) இலங்­கை­யின் வட­ப­கு­தி­யில் உள்ள சிவ பக்தர்­கள் பங்­கேற்­ப­தற்கு இந்­திய மத்திய அரசு அனு­மதி அளித்­துள்­ளது.

இந்த விழா­வில் பங்­கேற்­ப­வர்­க­ளுக்­காக, காங்­கே­சன்­து­றை­யில் இருந்து சென்­னைக்கு பய­ணி­கள் கப்­பல் வச­தி­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த விழா­வில் பெரும் எண்­ணிக்­கை­யான பக்­தர்­கள் பங்­கேற்­பார்­கள் என்று எதிர்­பார்க்­கி­றோம், என்­றும் அந்­தச் செய்­திக் குறிப்­பில் கூறப்­பட்­டுள்­ளது.

இருப்­பி­னும் இது தொடர்­பில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு எந்த அறி­விப்­பை­யும் வெளி­யி­ட­வில்லை.

Leave a comment