சென்னையில் ரூ.3,989 கோடியில் புதிய வீதிகள்

522 0

201606231629263151_New-roads-built-at-Rs3989-crore-in-Chennai-Jayalalithaa_SECVPFசென்னையில் ரூ.3,989 கோடியில் புதிய வீதிகள் போடப்பட்டிருப்பதாக முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று பதில் அளித்து உரையாற்றினார். அவர் கூறியதாவது:-நெடுஞ்சாலைத்துறை மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் 211.44 கோடி ரூபாய் செலவில் 68.11 கி.மீ. நீளமுள்ள 13 புறவழிச் சாலைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. 19,190.52 கோடி ரூபாய் செலவில் 46,890.50 கி.மீ. சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 1,793 பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் 3,067.30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. மேலும், 10,298 கோடி ரூபாய் செலவிலான பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் 3,989 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 4,492 கி.மீ. சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அதில் 3,390 கி.மீ. பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள இதர நகராட்சிகளில் குடிநீர் விநியோகம், பாதாளச் சாக்கடை திட்டம், சாலைகள், மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றிற்கான 9,619 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 24,231 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதே போன்று பேரூராட்சிகளில் 3,625 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 20,751 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 8,943 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வழங்கல் மற்றும் பாதாளச் சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதே போன்று, சென்னை பெருநகரப் பகுதியில் 4,987 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 60 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment