ஒலிம்பிக்கில் சிறுத்தைப்புலி சுட்டுக்கொலை

610 0

201606230905594426_Amazon-jaguar-shot-dead-after-Olympic-torch-ceremony_SECVPFபிரேசில் நாட்டில் உள்ள ரியோடிஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு ஒலிம்பிக் தீபம் ஏற்றி எடுத்து செல்லும் நிகழ்ச்சி அங்குள்ள மனாஸ் நகரில் 20-ந் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜூமா என்றழைக்கப்படும் பெண் சிறுத்தைப் புலி பங்கேற்றது.இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அந்த சிறுத்தைப்புலி சற்றும் எதிர்பாராத வகையில் அதன் கண்காணிப்பாளர்களிடம் இருந்து தப்பி வந்து ஒரு படை வீரரை தாக்கியது. அந்த சிறுத்தைப்புலியை நோக்கி மயக்க மருந்து தடவிய 4 ஈட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக வீசப்பட்டன. ஆனாலும் அந்த சிறுத்தைப்புலியை தடுத்து நிறுத்தும் முயற்சி வெற்றி பெறவில்லை.

இதையடுத்து சிறுத்தைப்புலியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள அந்த வீரர் தனது கைத்துப்பாக்கியை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டார். தனது கைத்துப்பாக்கியால் அவர் அந்த சிறுத்தைப்புலியை சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்துக்காக ஒலிம்பிக் குழுவினர் மன்னிப்பு கேட்டனர்.

சங்கிலியால் பிணைக்கப்பட்ட ஒரு வன விலங்கின் அருகே அமைதி மற்றும் ஒற்றுமையின் சின்னமாக கருதப்படுகிற ஒலிம்பிக் தீபம் ஏற்றுகிற நிகழ்ச்சியை அனுமதித்தது தவறு என அந்தக்குழு கூறி உள்ளது. மேலும், இனி இப்படி ஒரு சம்பவம் நடக்காது எனவும் அந்தக் குழு உறுதி அளித்துள்ளது.

Leave a comment