தனி­யார் கல்வி நிலை­யங்­கள் ஞாயிறு தினங்­க­ளில் விடு­முறை!

229 0

வடக்கு மாகா­ணத்­தில் இயங்­கும் தனி­யார் கல்வி நிலை­யங்­கள் பிற்­ப­கல் 6 மணிக்குப் பின்­ன­ரும் காலை 6 மணிக்கு முன்­ன­ரும் செயற்­ப­டு­வதை நிறுத்­த­வும் ஞாயிறு தினங்­க­ளில் விடு­முறை வழங்­க­வும் மிக விரை­வில் நிய­திச் சட்­டத்­தின் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என வடக்கு மாகாண கல்வி அமைச்­சர் சர்­வேஸ்­வ­ரன் ஆணித்­த­ர­மாகத் தெரி­வித்­துள்­ளார்.இது தொடர்­பில் அவர் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ணத்­தில் இயங்­கும் தனி­யார் கல்வி நிலை­யங்­கள் வெள்ளி மற்­றும் ஞாயிறு தினங்­க­ளில் விடு­முறை வழங்க வேண்­டும் என­வும் நேரம் தொடர்­பா­க­வும் பல­த­ரப்­பி­ன­ரா­லும் கோரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. இந்த விட­யத்தை நானும் வலி­யு­றுத்­து­கின்­றேன்.

எமது மாண­வர்­கள் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் பெற்­றோர்­க­ளின் முகங்­களைக் கூடப் பார்க்க முடி­யாது தனி­யார் கல்வி நிலை­யங்­க­ ளுக்­குச் செல்­கின்­ற­னர். வாரத்­தில் விடு­மு­றை­யான தின­மும் மாண­வர்­கள் ஓய்வு இல்­லாது இவ்­வாறு தனி­யார் கல்வி நிலை­யங்­க­ளுக்­குள் இருப்­பதை ஏற்­க­ மு­டி­யாது.

அவர்­கள் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளில் வீட்­டில் இருந்து படிக்­கின்­றார்­களோ, விளை­யா­டு­கின்­றார்­களோ எது­வா­யி­னும் அவர்­கள் வீட்­டில் பெற்­றோ­ரு­டன் ஓய்­வாக இருக்க வேண்­டும். ஆகவே அன்­றைய தினத்­தில் எந்த வகுப்­புக­ளை­யும் நடத்தத் தடை விதிக்­கப்­ப­டும் வகை­யில் நிய­திச் சட்­டம் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது.தவற விடாதீர்கள்:  பேருந்து சேவை ஊழியா்களின் போராட்டம் கைவிடப்பட்டது

நாம் கொண்டு வர­வுள்ள நிய­திச் சட்­டத்­தின் ஊடாக தனி­யார் கல்வி நிலை­யங்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­து­டன் மட்­டு­மல்­லாது மாண­வர்­க­ளுக்­கான ஒழுக்­கக் கோவையும் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது. அவற்­றின் ஊடாக எமது மாண­வர்­க­ளின் ஒழுக்­கம், கலா­சா­ரம் பேண நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்–என்­றார்.இவை தொடர்­பான கோரிக்கை ஒன்றை வடக்கு மாகாண சபை­யின் 93 ஆவது அமர்­வில் சர்­வேஸ்­வ­ரன் விடுத்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a comment