மக்களுக்கு எச்சரிக்கை ! வங்­காள விரி­கு­டாவின் தாழ­முக்கம் இலங்­கையை பாதிக்கும்

263 0

எதிர்­வரும் வாரங்­களில் மழை­யுடன் கூடிய கால­நிலை நிலவும் சாத்­தியம் உள்­ள­தாக  கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது. 

மேற்கு வங்­காள விரி­குடா பகு­தியில் ஏற்­பட்­டு­ வரும் தாழ­முக்கம் இலங்­கையின் கரை­யோ­ரங்­க­ளையும், தென்­னிந்­தி­யா­வையும் அதி­க­ளவில் பாதிக்கும் சாத்­தியம்   உள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் பல்­வேறு பகு­தி­களில் தற்­போது கடும் வரட்சி நிலவி வரு­கின்­றது. குறிப்­பாக  தென்­னி­லங்­கையில் பல்­வேறு மாவட்­டங்­களில் கடும் வரட்சி நிலவி வரு­கின்­றது. 50 வீதத்­திற்கும் குறை­வான வகை­யி­லேயே நீர் சேமிக்­கப்­பட்­டுள்­ளது, விவ­சாயம் மற்றும் மக்­களின் அன்­றாட வாழ்க்கை மிகவும் மோச­மாகப்பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்றும்   கால­நிலை அவ­தான நிலையம் தெரி­வித்­துள்­ளது.

வடக்கு, வட­மத்­திய மாகா­ணங்­க­ளிலும் வரட்சி நில­வு­கின்­றது. எனினும் இலங்­கையின் ஒரு­சில பகு­தி­களில் அதிக மழை­வீழ்ச்சி அவ்­வப்­போது பதி­வாகி வரு­கின்­றது. குறிப்­பாக மேல், மத்­திய மாகா­ணங்­களில் மழையுடன் கூடிய  கால­நிலை நில­வு­கின்­றது.

இந்­நி­லையில் எதிர்­வரும் வாரங்­களில் இலங்­கையில் மழை கன­மழை மற்றும் கடுங்­காற்று வீசும் சாத்­தியம் உள்­ள­தா­கவும் கால­நிலை அவ­தான நிலையம் தெரி­விக்­கின்­றது.

குறிப்­பாக மேற்கு வங்­காள விரி­கு­டாவில் ஏற்­பட்­டு­ வரும் தாழ­முக்கம் கார­ண­மாக இலங்கை மற்றும் தென்­னிந்­திய பகு­திகள் அதி­க­ளவில் பாதிக்­கப்­ப­டலாம் எனவும் இலங்­கையில் கரை­யோரப்பகு­திகள் அதிக தாக்­கத்­திற்கு முகங்­கொ­டுக்க நேரி­டலாம் எனவும் எதிர்­வு­ கூ­றப்­ப­டு­கின்­றது.

இடி­யுடன் கூடிய கன­மழை கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகமும் அதி­க­ரிக்கும் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனவே நிலவும் காலநிலை குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறும்  வளி

மண்டலவியல் திணைக்கள அறிவுறுத்தல் களை அவதானிக்குமாறும் பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment