சிரியா: ராணுவத்தின் வான்வழி தாக்குதல்களில் 29 பேர் பலி

473 0

சிரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள அலிப்போ மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

துருக்கி எல்லையையொட்டிய சிரியாவின் அலிப்போ மாகாணம் தீவிரவாத கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் இங்கு சிரிய அரசு படைகளும், ரஷிய படைகளும் போர் விமானங்கள் முலம் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள அல்-அடாரெப் நகரில் நேற்றிரவு ஒரு மார்கெட்டை குறிவைத்து நடத்தப்பட்ட மூன்று வான்வழி தாக்குதலுல் 43 பொதுமக்கள் உயிரிழந்தனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை சிரியா அரசுப்படை நடத்தியதா அல்லது ரஷிய படை நடத்தியதா என்பது தெரியவில்லை.

இப்பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சமாதான வளையம் அமைப்பதற்கு ரஷ்யா, துருக்கி மற்றும் ஈரான் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும், இந்த தாக்குதலினால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் 1-ம் தேதி இப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment