த.தே.கூட்டமைப்பிலிருந்து பங்காளிக்கட்சிகள் விலகக்கூடாது-விக்னேஸ்வரன்(காணொளி)

366 0

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து பங்காளிக்கட்சிகள் விலகக்கூடாது என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவம், வடக்கு மாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறுவதை விட சேர்ந்து பயணிப்பதே மக்களுக்கு நன்மை பயக்கும் என, வடக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமாகிய க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய பின்பு இடையில் வெளியேறிய இணைத்தலைவர் க.வி. விக்னேஸ்வரன் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏனையவர்களை உள்வாங்குகின்ற நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவ கட்சிகள் வெளியேறக்கூடாது என்ற கருத்தை பேரவை கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அடிப்படை கொள்கையில் இருந்து விலகவில்லை என்பதை தலைமைத்துவம் மக்களிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்த முதலமைச்சர், குறைபாடுகள் உள்ள புதிய அரசியலமைப்பின் வழிகாட்டல் அறிக்கையை ஏற்றுக் கொண்டால் தமிழ் மக்களிற்கு பாதிப்பு ஏற்படும் என்றும், மக்கள் பிரச்சினையில் இருந்து ஒரு போதும் மீள முடியாது என்றும் குறிப்பிட்டார். குறைபாடுள்ள புதிய அரசியலமைப்பின் வழிகாட்டல் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தகுதியானவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சி அல்ல என்றும், அது ஒரு மக்கள் இயக்கம் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Leave a comment