தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் இன்று

415 0

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் மத்­திய செயற்­குழு கூட்டம் இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை முற்­பகல் 10மணிக்கு வவு­னி­யாவில் உள்ள வன்னி இன் ஹோட்­டலில் நடை­பெ­ற­வுள்­ளது. 

இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சோ.சேனா­தி­ராஜா தலை­மையில் நடை­பெறும் இக்­கூட்­டத்தில் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனும் பங்­கேற்­க­வுள்ளார். இந்த மத்­திய செயற்­குழு கூட்­டத்தில் விசே­ட­மாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் தொடர்­பா­கவும், கிழக்கு மாகா­ணத்தில் எழுந்­துள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை தர­மு­யர்த்­துதல் தொடர்­பான விட­யங்கள் குறித்தும், இடைக்­கால அறிக்கை தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ள­தாக இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் வெளி­ வி­வ­கா­ரங்­க­ளுக்­கான செய­லா­ளரும், கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் எம்.பி குறிப்­பிட்டார்.

இதே­வேளை இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஸ்தாபக பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி(ஈ.பி.ஆர்.எல்.எப்) பகி­ரங்­க­மாக அறி­வித்­துள்ள நிலையில், கடந்த வாரம் யாழில் உள்ள இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒருங்­கி­ணைப்புக் குழு கூட்­டத்­திலும் அக்­கட்சி பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.

இருப்­பினும் அக்­கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்த ஏனைய பங்­கா­ளிக்­கட்­சி­க­ளான புளொட், ரெலோ ஆகிய கட்­சிகள் ஈ.பி.ஆர்.எல்.எப்.உடன் பேச்­சு­வார்த்தை நடத்­த­வேண்டும் என்றும், இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ராஜா அதனை முன்­னெ­டுக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தன. இன்­று­ந­டை­பெறும் மத்­திய செயற்­குழு கூட்­டத்தில் இவ்­வி­டயம் தொடர்பில் அதி­க­ளவு அவ­தானம் செலுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. மேலும் இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது முன்­ன­தாக நடை­பெற்ற மத்­திய செயற்­குழு கூட்டத்தில் சுரேஸ்பிரேமச்சந்திரனின் செயற்பாடுகள், கருத்துக்கள் தொடர்பில் அவதானித்து கருத் துக்களை முன்வைப்பதற்காக வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தலைமையிலான குழுவொன்றை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment