கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம்

378 0

பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றின் கனேடிய பிரதிநிதிகள் குழுவொன்று மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமொன்றை மேற்கொண்டு இலங்கைக் வந்துள்ளனர்.

சமாதான முனைப்புக்கள் குறித்து கவனம் செலுத்தும் நோக்கில் இந்தப் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், இலங்கையின் சிரேஸ்ட அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதிநிதிகள் குழுவில் பல்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment